தடுமாறும் சென்செக்ஸ்! நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை கண்டு கொள்ளாத சந்தை!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 13 மற்றும் 14 தேதிகளில் சிறு குறு தொழில்முனைவோர்கள், என் பி எஃப் சி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தொடங்கி, விவசாயிகள், வியாபாரிகள், சம்பளதாரர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், ரேஷன் அட்டை என பலருக்கும் பல திட்டங்களை அறிவித்தார்.

ஆனால் இந்த திட்டங்களையோ, செய்திகளையோ, இந்திய பங்குச் சந்தைகள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இன்றும் சென்செக்ஸ் சுமாராக 240 புள்ளிகள் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

என்ன காரணம்? இன்று சென்செக்ஸில் கள நிலவரம் என்ன என்பதைப் பார்ப்போம்.

காரணம்

காரணம்

1. ஒரே அடியாக 20 லட்சம் கோடிக்கு திட்டங்களைச் சொல்வார் என எதிர்பார்த்தது சந்தை. ஆனால் பகுதி பகுதியாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் நிதி அமைச்சர்.
2. இந்த திட்டங்களுக்கான பணம் எங்கிருந்து வரும் என்பதை நிதி அமைச்சர் விளக்கவில்லை.
3. என் பி எஃப் சி-க்களுக்கு கொடுத்திருக்கும் உதவிகள் போதாது என... காரணங்களை அடுக்குகிறார்கள் அனலிஸ்ட்கள்.

எவ்வளவு சரிவு

எவ்வளவு சரிவு

கடந்த மே 13, 2020 அன்று மாலை தான் நிதி அமைச்சர் தன் முதல் பகுதி அறிவிப்புகளை வெளியிட்டார். அன்று மாலை சென்செக்ஸ் 32,008 புள்ளிகளில் நிறைவடைந்து இருந்தது. மே 14 அன்று 886 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 31,122 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று 250 புள்ளிகள் சரிந்து 30,872 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒட்டு மொத்தத்தில், மே 13 குளோசிங்கில் இருந்து, சென்செக்ஸ் சுமாராக 1,136 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.

சென்செக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிலவரம்

நேற்று மாலை சென்செக்ஸ், 31,122 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 31,296 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. 170 கேப் அப்பிலும் ஏற்றத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை. சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 30,828 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,598 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 716 ஏற்றத்திலும், 798 பங்குகள் இறக்கத்திலும், 84 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

மே 13, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் மீண்டும் 0.91 % ஏற்றாத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 2.75 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.65 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.95 % இறக்கத்திலும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

நிஃப்டி செக்டோரியல் இண்டெக்ஸ்களில் மெட்டல் தவிர மற்ற எல்லா துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. நிஃப்டி ஆட்டோ சுமார் 2 % வரை சரிந்து, சந்தை இறக்கத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டு இருக்கிறது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

பாரத் பெட்ரோலியம், ஓ என் ஜி சி, சிப்லா, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மஹிந்திரா & மஹிந்திரா, பார்தி இன்ஃப்ராடெல், ஹிரோ மோட்டோ கார்ப், மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+