கடந்த 30-04-2020 அன்று சென்செக்ஸ் கொரோனாவுக்குப் பின் உச்சப் புள்ளியாக 33,887 புள்ளிகளைத் தொட்டது. அதன் பின், நேற்று 13-05-2020 தான் 32,800 புள்ளிகளைக் கடந்தது. ஆனால் நிலைக்கவில்லை.
நேற்று மாலை 4 மணி அளவில், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு அறிவிப்புகளைச் செய்தார். அதோடு பல துறைகளுக்கு பணம் கொடுப்பது தொடர்பாகவும் அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் சென்செக்ஸ் இன்று காலையில் இருந்தே சரிந்து கொண்டு தான் இருக்கிறது. நிதி அமைச்சரின் அறிவிப்புகளைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
இன்று சென்செக்ஸ் நிலவரம் என்ன..? ஒரு ரவுண்ட் பார்த்துவிடுவோம்.
சென்செக்ஸ் நிலவரம்
நேற்று மாலை சென்செக்ஸ், 32,008 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 31,466 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. இது சுமாராக 530 புள்ளிகள் கேப் டவுன். சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 31,344 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. தற்போது 615 புள்ளிகள் சரிவில் 31,392 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 04 பங்குகள் ஏற்றத்திலும், 26 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,829 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 713 ஏற்றத்திலும், 1,018 பங்குகள் இறக்கத்திலும், 98 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக பங்குச் சந்தைகள்
உலக பங்குச் சந்தைகள்
மே 13, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் மீண்டும் 1.55 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 1.51 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.85 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.56 % இறக்கத்திலும் வர்த்தகமாயின.
ஆசியாவில் இன்று
இன்று மே 14, 2020, ஆசியாவில், மற்ற எல்லா சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 2.17 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இப்படி உலக சந்தைகள் ஒட்டு மொத்தமாக சொதப்பிக் கொண்டு இருப்பதால், சென்செக்ஸ்-ம் செம அடி வாங்கி இருக்கிறது.
பங்கு விலை நிலவரம்
பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்ட்லே, சன் பார்மா, ஹிந்துஸ்தான் யுனிலிவர், பிரிட்டானியா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. என் டி பி சி, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப், இன்ஃபோசிஸ், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications