நேற்று காலை பங்குச் சந்தை செய்தியிலேயே, சென்செக்ஸ் செம அடி வாங்கப் போகிறதா என்கிற தலைப்பில் எழுதி இருந்தோம். அதில் சென்செக்ஸின் டெக்னிக்கல் சார்டில், இறக்கத்துக்கான டிரெண்ட் கிட்டத்தட்ட உறுதியாகிறது எனச் சொல்லி இருந்தோம். அதோடு "கடந்த 16-01-2020 மற்றும் 17-01-2020 ஆகிய இரண்டு நாட்களுக்கான டே சார்ட்டைப் பார்த்தால் இரண்டு டோஜி கேண்டில்கள் உருவாகி இருக்கின்றன. இந்த டோஜி கேண்டில் உருவாகிறது என்றாலே அது டிரெண்டை மாற்றப் போகிறது என புரிந்து கொள்ளலாம். இரண்டு டோஜி கேண்டிலுக்குப் பின் ஒரு பெரிய பியர் கேண்டில் (சந்தை இறக்கம்) உருவாகி இருப்பதால், சந்தை இறங்கத் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது" எனவும் சொல்லி இருந்தோம்.
மேலும் "இன்றைக்கு சென்செக்ஸ் குறைந்தபட்சம் 41,930-க்கு மேல் நிறைவடைந்தால், சென்செக்ஸ் இன்னும் ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் 41,775 புள்ளிகளுக்குக் கீழ் நிறைவடைந்தால், சென்செக்ஸ் இறங்கத் தொடங்கிவிட்டது எனச் சொல்ல முடியும்" எனவும் தெளிவாகச் சொல்லி இருந்தோம். அதோடு நேற்று பங்குச் சந்தை குளோசிங் பெல் செய்தியில் கூட 41,528-ல் நேற்று சென்செக்ஸ் நிறைவடைந்து இருப்பதால் இறக்க டிரெண்டு தொடங்கிவிட்டதாகச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே சென்செக்ஸ் இன்று காலையில் இருந்தே இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

நேற்று மாலை சென்செக்ஸ் 41,528 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,487 புள்ளிகளில் கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 41,301 என்கிற குறைந்தபட்ச புள்ளிகளைத் தொட்டது. தற்போது சுமாராக 41,424 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,195 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, தற்போது 12,195 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,371 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 945 ஏற்றத்திலும், 1,255 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 2,371 பங்குகளில் 147 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 202 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பார்தி இன்ஃப்ராடெல், ஜி எண்டர்டெயின்மெண்ட், கோல் இந்தியா, பாரத் பெட்ரோலியம், கெயில் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஏஷியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா ஸ்டீல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஐ ஓ சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications