மும்பை: தொடர்ந்து புதிய உச்சத்தைக் கண்டு கொண்டு இருந்த சென்செக்ஸ், கடந்த நவம்பர் 07, 2019 அன்று 40,653 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதற்கு மேல் சந்தை புதிய உச்சங்களில் நிறைவடையவில்லை. அதோடு கடந்த நவம்பர் 08, 2019 அன்று தான், சென்செக்ஸின் வரலாற்று உச்சமான 40,749 புள்ளிகளைத் தொட்டது. அதற்குப் பின் சென்செக்ஸ் கொஞ்சம் தடுமாறத் தான் செய்தது.
கடந்த வாரத்திலேயே, சென்செக்ஸ் டே சார்ட்டில் இந்த ஏற்ற டிரெண்டு முடிந்ததைக் குறிப்பிட்டு இருந்தோம். நவம்பர் 07 கேண்டில் சார்ட் ஒரு ஹேங்கிங் மேன் பேட்டனைக் காட்டுகிறது. அதோடு அதற்கு முந்தைய நவம்பர் 06 அன்றைய குளோசிங் புள்ளியை உடைத்துக் கொண்டு, அதன் ஓப்பனிங் புள்ளிகளைத் தொட்டு நவம்பர் 07 அன்று சந்தை வர்த்தகம் ஆகி இருந்த்து. எனவே அடுத்து வரும் நாட்களில் சந்தை ஏற்றம் காண்பது கொஞ்சம் கடினம் தான் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே, சந்தை கடந்த நவம்பர் 08 முதல் இன்று வரை இறங்கிக் கொண்டு இருக்கிறது. இன்று சென்செக்ஸ் ஏற்றம் கண்டாலும் டிரெண்டை மாற்றும் விதத்தில் தன் முந்தைய நாளின் ஒப்பனிங் புள்ளியை விட கூடுதலாக ஏற்றம் கண்டு நிறைவடையவில்லை. எனவே உஷாராக வர்த்தகம் மேற்கொள்ளச் சொல்லி இருந்தோம்.

ஆனால் இன்று காலையிலேயே, சென்செக்ஸ் தன் டிரெண்டை மாற்றி வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. எனவே ஏற்றம் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் சென்செக்ஸ் பாசிட்டிவ்வாக வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
சென்செக்ஸ் நேற்று மாலை 40,286 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,408 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 40,650 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய உச்ச புள்ளி சுமார் 265 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 11,904 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 11,973 உச்ச புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய உச்ச புள்ளிக்கு 100 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,142 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 988 ஏற்றத்திலும், 1,053பங்குகள் இறக்கத்திலும், 101 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,142 பங்குகளில் 41 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 85 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
பார்தி ஏர்டெல், பார்தி இன்ஃப்ராடெல், எஸ்பிஐ, க்ராசிம், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், சிப்லா, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டெக் மஹிந்திரா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications