சென்செக்ஸ் மீண்டும் 31,000 புள்ளிகளை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருக்கிறது. கொரோனாவுக்குப் பின், சென்செக்ஸ் 33,887 புள்ளிகளைத் தொட்டது தான் மிகப் பெரிய உச்சப் புள்ளியாக இருக்கிறது.
31,000 புள்ளிகளுக்கே இவ்வளவு சிரமப்பட்டால், எப்போது சென்செக்ஸ் 33,887 புள்ளிகளைத் தொடும் என முதலீட்டாளர்களும் கொஞ்சம் சலித்துக் கொள்கிறார்கள்.
சரி இன்று சென்செக்ஸ் எப்படி வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. சர்வதேச சந்தைகளின் நேற்றைய நிலவரம் என்ன என்பதைப் பார்த்துவிடுவோம்.
சென்செக்ஸ் நிலவரம்
மே 20, 2020 மாலை சென்செக்ஸ், 30,818 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 30,904 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சுமார் 85 புள்ளிகள் கேப் அப்பில் தொடங்கினாலும், இப்போது வரை ஏற்றத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸின் குறைந்தபட்ச புள்ளியாக 30,765 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. தற்போது 30,993 புள்ளிகளைத் தொட்டு 174 புள்ளிகள் ஏற்றாத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,660 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,090 பங்குகள் ஏற்றத்திலும், 476 பங்குகள் இறக்கத்திலும், 94 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக பங்குச் சந்தைகள்
மே 20, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 2.08 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. லண்டனின் எஃப் டி எஸ் இ 1.08 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.87 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.34 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. இந்த பாசிட்டிவ் செய்தி கூட, இன்றைய சென்செக்ஸ் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
ஆசியா
ஆசியாவில் ஜப்பானின் நிக்கி மற்றும் இந்தோனேசியாவின் ஜகர்தா (இரண்டுமே 0.06 % தன் இறக்கம் கண்டு இருக்கின்றன) தவிர மற்ற எல்லா சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தைவான் நாட்டின் தைவான் வெயிடெட் 0.78 % ஏற்றத்திலும், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
பஜாஜ் ஆட்டோ, பார்தி இன்ஃப்ராடெல், ஹீரோ மோட்டோகார்ப், ஜி எண்டர்டெயின்மெண்ட், ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. எண்டிபிசி, அதானி போர்ட்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், க்ராசிம், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications