இந்த வாரத்தின் முதல் 2 நாட்களில் பயங்கர ஏற்றம் கண்ட சென்செக்ஸ், அடுத்தடுத்த நாட்களில் அத்தனை வலுவான ஏற்றத்தைக் காணவில்லை என்றே சொல்லலாம்.
நேற்று வர்த்தக நேரத்தில் 38,000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ், தற்போது, அந்த லெவல்களை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போராடிக் கொண்டு இருக்கிறது.
இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன? உலக சந்தைகள் நேற்று எப்படி வர்த்தகமாயின. எந்த பங்குகள் விலை ஏற்றம் கண்டு இருக்கின்றன? வாருங்கள் பார்ப்போம்.
சென்செக்ஸ்
நேற்று சென்செக்ஸ், 37,871 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,814 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 37,972 புள்ளிகளைத் தொட்டு மெல்லிய ஏற்றாத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. வர்த்தக சூழல்களைப் பார்க்கும் போது, சென்செக்ஸ் 38,000 புள்ளிகளைத் தொடும் என எதிர்பார்க்கலாம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,380 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,336 பங்குகள் ஏற்றத்திலும், 906 பங்குகள் இறக்கத்திலும், 138 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக மும்பை பங்குச் சந்தையில், 78 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.
பங்கு விலை நிலவரம்
ஜி எண்டர்டெயின்மெண்ட், ஐ ஓ சி, பி பி சி எல், ஈஷர் மோட்டார்ஸ், ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆக்ஸிஸ் பேங்க், ஸ்ரீ சிமெண்ட்ஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டி சி எஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக பங்குச் சந்தைகள்
22 ஜூலை 2020 அன்று, அமெரிக்க நாஸ்டாக் பங்குச் சந்தை 0.24 % ஏற்றத்திலேயே வர்த்தகமானது. 22 ஜூலை, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.0 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.32 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.51 % இறக்கத்திலும் வர்த்தகமானது. ஆக ஐரோப்பிய சந்தைகள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று 23 ஜூலை 2020, ஆசியாவில், சிங்கப்பூர் நிஃப்டி, சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், ஹாங்காங்கிங் ஹேங்செங், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் போன்றவைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. தைவானின் தைவான் வெயிடெட், சீனாவின் ஷாங்காய் காம்போஸைட், ஜப்பானின் நிக்கி போன்ற பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications