38,617-ஐத் தொட்ட சென்செக்ஸ்! எந்த பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன?

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் நேற்று வர்த்தக நேர முடிவில் 38,492 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலையிலேயே 38,427 புள்ளிகளில் கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், அதிகபட்சமாக 38,617 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸ் குறைந்தபட்சமாக 38,336 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ் அடுத்து 39,000 புள்ளிகளைத் தொடுமா என முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். சரி பங்கு விலை நிலவரத்துக்குப் போவோம்.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,970 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,154 பங்குகள் ஏற்றத்திலும், 706 பங்குகள் இறக்கத்திலும், 110 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, இதுவரை மும்பை பங்குச் சந்தையில், 52 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

இண்டஸ் இண்ட் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், டாடா ஸ்டீல், க்ராசிம், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. நெஸ்ட்லே, ஹெச் சி எல் டெக், அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

இன்று 29 ஜூலை 2020, ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 1.05% ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

28 ஜூலை 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 1.27 % இறக்கத்தில் வர்த்தகமானது. 28 ஜூலை, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.40 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.22 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.03 % இறக்கத்திலும் வர்த்தகமானது. ஆக அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. நம் சென்செக்ஸ் பெரிய ஏற்றம்காணாமல் தடுமாற இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+