மும்பை பங்குச் சந்தையின் முக்கிய பெஞ்சமார்க் இண்டெக்ஸான சென்செக்ஸ் 30 நேற்று 38,843 என்கிற புதிய உச்சத்தில் (மார்ச் சரிவுக்குப் பின்) நிறைவடைந்தது.
இன்று காலை 38,930 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 38,980 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. குறைந்தபட்சமாக 38,846 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது சென்செக்ஸ்.
இன்று சென்செக்ஸ் இண்டெக்ஸில் எந்த பங்குகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? ஆசிய சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன? வாருங்கள் பார்ப்போம்.
பங்கு விலை நிலவரம்
பஜாஜ் ஆட்டோ, இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ,மஹிந்திரா & மஹிந்திரா, ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பார்தி ஏர்டெல், ஏஷியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,065 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,329 பங்குகள் ஏற்றத்திலும், 642 பங்குகள் விலை இறக்கத்திலும், 94 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 123 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (26 ஆகஸ்ட் 2020, புதன் கிழமை), ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, தைவானின் தைவான் வெயிடெட், தாய்லாந்தின் எஸ் இ டி காம்பொசைட் தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம், இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, சீனாவின் ஷாங்காய் காம்போசைட் சந்தை 1.08 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
ஐரோப்பிய & அமெரிக்க பங்குச் சந்தைகள்
நேற்று, 25 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 0.76 % ஏற்றத்தில் வர்த்தகமானது. லண்டனின் எஃப் டி எஸ் இ 1.11 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.01 % எற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.04 % இறக்கத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. ஆக இந்திய சந்தைகள், மார்ச் சரிவுக்குப் பின், இன்றும் புதிய உச்சத்தில் நிறைவடைந்தால் அது பெரிய விஷயம் தான்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications