சென்செக்ஸ் மீண்டும் 35,000 புள்ளிகளுக்கு நெருக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இன்று, சென்செக்ஸ், 35,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்தால் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பாசிட்டிவாக இருப்பதாக கருதலாம்.
இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன? உலக சந்தைகள் நேற்று எப்படி வர்த்தகமாயின? தற்போது பங்குச் சந்தைகளில் எந்த பங்குகள் எல்லாம் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? வாருங்கள் பார்ப்போம்.
சென்செக்ஸ்
நேற்று மாலை சென்செக்ஸ், 34,842 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 35,144 புள்ளிகள் நல்ல கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 34,979 புள்ளிகளைத் தொட்டு 152 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 35,000 புள்ளிகளுக்கு நெருக்கமாக, விடாபிடியாக நிற்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,492 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,589 பங்குகள் ஏற்றத்திலும், 767 பங்குகள் இறக்கத்திலும், 136 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக பங்குச் சந்தைகள்
நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகள் ஓரளவுக்கு ஏற்றத்திலேயே வர்த்தகமாயின. நேற்று ஜூன் 25, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.38 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.97 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.69 % ஏற்றத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
ஆசியாவில் ஹாங்காங்கிங் ஹேங் செங் சந்தை தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, கொரியாவின் கோஸ்பி பங்குச் சந்தை 1.14 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இருப்பினும் இந்திய சந்தைகள் 35,000 புள்ளிகளில் நிலைக்க, தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
இன்ஃபோசிஸ், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், விப்ரோ, ஹெச் சி எல் டெக் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. கோட்டக் மஹிந்திரா, ஸ்ரீ சிமெண்ட்ஸ், டைடன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications