154 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்! இன்றும் 36,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா?

கடந்த ஐந்து நாட்களாக ஏற்றத்தில் மட்டுமே வர்த்தகமான சென்செக்ஸ், இன்றும் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.

இன்றும் சென்செக்ஸ் 36,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்தால், தொடர்ந்து இரண்டாவது நாளாக 36,500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைவதாக கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.

சரி சென்செக்ஸ் நிலவரம் என்ன? நேற்று ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள் எல்லாம் எப்படி வர்த்தகமாகி இருக்கின்றன? இன்று எந்த பங்குகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? எந்த பங்குகளை நாம் கவனிக்கலாம்? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கவனிக்க வேண்டிய பங்குகள்

கவனிக்க வேண்டிய பங்குகள்

டைடன் - காலாண்டு முடிவுகள், யெஸ் பேங்க் - 15,000 கோடி நிதி திரட்டல்
மாருதி சுசூகி - ஜூன் 2020-ல் 50,742 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி
ரிலையன்ஸ் - ஃபேஸ்புக் 43,574 கோடி ரூபாய் பணம் கொடுத்து இருப்பது
இண்டஸ் இண்ட் பேங்க் - ரூட் ஒன் கம்பெனி இந்த வங்கி பங்குகளில் கூடுதலாக முதலீடு செய்ய இருப்பது
சுவாரி அக்ரோ - என்பிகே-ஏ ஆலையில் வேலைக்கு ஆள் கிடைக்காததால் மூடல்.
அதானி போர்ட்ஸ் - 1.25 பில்லியன் டாலரை foreign currency bond மூலம் திரட்ட இயக்குநர் குழு அனுமதி

பங்குகள் விலை நிலவரம்

பங்குகள் விலை நிலவரம்

இண்டஸ் இண்ட் பேங்க், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், எஸ்பிஐ, டாக்டர் ரெட்டீஸ், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்ஃபோசிஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச் சி எல் டெக், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

07 ஜூலை 2020 அன்று, அமெரிக்க நாஸ்டாக் பங்குச் சந்தை 0.86 % இறக்கத்தில் வர்த்தகமானது. 07 ஜூலை, 2020, இங்கிலாந்தின் எஃப் டி எஸ் இ 1.53 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.74 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.92 % இறக்கத்திலும் வர்த்தகமானது. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய & அமெரிக்க பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டு இருக்கின்றன.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், கொரியாவின் கோஸ்பி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் தவிர, மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 1.30 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சரி சென்செக்ஸ் நிலவரத்துக்கு வருவோம்.

சென்செக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிலவரம்

நேற்று மாலை சென்செக்ஸ், 36,674 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 36,738 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 36,828 புள்ளிகளைத் தொட்டு 154 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் சுமாராக 172 புள்ளிகள் தான்... 37,000 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டுவிடும். ஆனால் சென்செக்ஸை அத்தனை வலுவாக மேலே கொண்டு செல்ல வலுவான செய்திகள் இல்லை. எனவே கொஞ்சம் தாக்கு பிடித்தால் 36,500 புள்ளிகளுக்கு மேலே வர்த்தகம் நிறைவடைய வாய்ப்புகள் இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+