மீண்டும் சென்செக்ஸ் 35,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது தான் முதல் ஆறுதலான விஷயம்.
அதனைத் தொடர்ந்து சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் டாப் 30 பங்குகளில் 20 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாவது இரண்டாவது நல்ல விஷயம்.
மற்ற உலக சந்தைகளின் நிலவரம் என்ன? எந்த பங்குகள் எல்லாம் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? வாருங்கள் பார்ப்போம்.

சென்செக்ஸ்
நேற்று மாலை சென்செக்ஸ், 34,961 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 35,168 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 35,121 புள்ளிகளைத் தொட்டு 160 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு வழியாக மீண்டும் 35,000 புள்ளிகளைத் தொட்டுவிட்டது சென்செக்ஸ்.

பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,679 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,322 பங்குகள் ஏற்றத்திலும், 1,225 பங்குகள் இறக்கத்திலும், 132 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்
29 ஜூன் 2020 அன்று, அமெரிக்க நாஸ்டாக் பங்குச் சந்தை ஏற்றத்திலேயே வர்த்தகமானது. ஜூன் 30, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.29 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.09 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.14 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஆசிய சந்தைகள்
ஆசியாவில், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர, எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, ஜப்பானின் நிக்கி பங்குச் சந்தை 2.09 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த ஆசிய சந்தை சரிவு கூட, இந்திய சந்தைகளின் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

பங்கு விலை நிலவரம்
டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஹெச் டி எஃப் சி, ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. கெயில், வேதாந்தா, சன் பார்மா, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.