கொரோனா வைரஸை, உலக சுகாதார அமைப்பு ஒரு பெரும் தொற்று நோயாக (Pandemic) அறிவித்த பின், உலக பங்குச் சந்தைகள் எல்லாம் ஆட்டம் காணத் தொடங்கின.
சென்செக்ஸ் சுமாராக 25,650 புள்ளிகள் வரை சரிந்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கொரோனா வைரஸ் சரிவுக்குப் பின், சென்செக்ஸ் தொட்ட அதிகபட்ச புள்ளியே 38,617 புள்ளிகளாக இருந்தது.
ஆனால் இன்று அதிகபட்சமாக 38,788 புள்ளிகளைத் தொட்டு, சென்செக்ஸ் தன் ஏற்றப் பாதையை உறுதி செய்து இருக்கிறது எனலாம். சரி இன்று விலை ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குகள் & உலக பங்குச் சந்தை நிலவரத்தை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
பங்கு விலை நிலவரம்
கெயில், ஜி எண்டர்டெயின்மெண்ட், எஸ் பி ஐ, இண்டஸ் இண்ட் பேங்க், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. யூ பி எல், நெஸ்ட்லே, டாடா ஸ்டீல், ஹெச் சி எல் டெக், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
சென்செக்ஸ் நிலவரம் என்ன
நேற்று மாலை சென்செக்ஸ், 38,528 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 34,727 புள்ளிகளில், வர்த்தகமாகத் தொடங்கியது. அதிகபட்சமாக 38,788 புள்ளிகளைத் தொட்டு 260 புள்ளிகளில் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல, சென்செக்ஸ் தன் கொரோனா சரிவுக்குப் பிறகான உச்சத்தில் இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,483 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,616 பங்குகள் ஏற்றத்திலும், 742 பங்குகள் விலை இறக்கத்திலும், 125 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 140 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று 19 ஆகஸ்ட் 2020, ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி தவிர மற்ற எல்லா நாட்டு பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. தைவான் நாட்டின் தைவான் வெயிடெட் அதிகபட்சமாக 0.58 % இறக்கத்த்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
உலக பங்குச் சந்தைகள்
18 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 0.73 % ஏற்றத்தில் வர்த்தகமானது. 18 ஆகஸ்ட், 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.83 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.68 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.30 % இறக்கத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.


Click it and Unblock the Notifications