சென்செக்ஸ் இன்றைய உச்சத்தில் இருந்து 759 புள்ளிகள் சரிவு! 3.7% சரிந்த ரிலையன்ஸ் பங்குகள்!

இந்தியாவின் சென்செக்ஸ் இண்டெக்ஸ், நேற்றில் இருந்து இறங்கு முகத்திலும், இழு பறியிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் ஆண்டுப் பொதுக் கூட்டம் என்கிற மிகப் பெரிய விஷயத்தோடு வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.

சென்செக்ஸ் இன்றைய உச்சத்தில் இருந்து 759 புள்ளிகள் சரிவு! 3.7% சரிந்த ரிலையன்ஸ் பங்குகள்!

இருப்பினும் பெரிதாக ஏற்றம் காணவில்லை. இன்று சென்செக்ஸில் எந்த பங்குகள் எல்லாம் விலை ஏற்றம் கண்டன, எந்த சர்வதேச சந்தை எப்படி வர்த்தகமாயின? என பல விவரங்களை செய்தியில் பார்ப்போம்.

பங்கு விலை நிலவரம்

இன்று சந்தையில் ஐடி கம்பெனிகளுக்கான அதிர்ஷ்ட நாள். விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக், டி சி எஸ், டெக் மஹிந்திரா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட், பார்தி இன்ஃப்ராடெல், கெயில் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. இன்று ஆண்டுப் பொதுக் கூட்டம் நடந்த போதிலும், சவுதி அராம்கோ தொடர்பான டீல் முடியாததால், ரிலையன்ஸ் பங்குகள் விலை 3.7 % சரிந்து இருக்கிறது.

சென்செக்ஸ்

நேற்று, சென்செக்ஸ், 36,033 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 36,314 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. சுமாராக மதியம் 3 மணி வரை ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. ஆனால் வர்த்தக நேர முடிவில் 36,051 புள்ளிகளைத் தொட்டு வெறும் 18 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்றைய வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 36,810 புள்ளிகள் வரைத் தொட்டு, 759 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது முதலீட்டாளர்கள் வருத்தத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,779 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,062 பங்குகள் ஏற்றத்திலும், 1,566 பங்குகள் இறக்கத்திலும், 151 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மும்பை பங்குச் சந்தையில் 110 பங்குகள் 52 வார விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

உலக பங்குச் சந்தைகள்

15 ஜூலை 2020 அன்று, லண்டனின் எஃப் டி எஸ் இ 2.06 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.57 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.89 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அற்புதமான ஆசியச் சந்தைகள்

ஆசியாவில், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட், தாய்லாந்தின் தைவான் வெயிடெட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி சந்தை 1.59 % ஏற்றத்தில் வர்த்தகமானது. உலக சந்தைகள் ஓகே என்றாலும் இந்திய சந்தைகளில் இந்த ஏற்றம் பிரதிபலிக்க வில்லையே!

இண்டெக்ஸ்

இன்று ஆட்டோ, ஐடி, மெட்டல், பார்மா எஃப் எம் சி ஜி போன்ற துறைகளைத் தவிர மற்ற எல்லா துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. நாம் ஏற்கனவே சொன்னது போல ஐடியில் முன்னனி பங்குகளான டி சி எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா என பல பங்குகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+