36,674 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

மீண்டும் சென்செக்ஸ், 36,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்து இருக்கிறது. சொல்லப் போனால், கொரோனா வைரஸால் மார்ச் 2020-ல் வீழ்ச்சி கண்ட பின், சென்செக்ஸ், 36,647 புள்ளிகளில் நிறைவடைவது, இதுவே முதல் முறை.

36,674 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

சரி இந்த மகிழ்ச்சியான தருணங்களில் பங்குகளைப் பற்றியும், ஒட்டு மொத்த பங்குச் சந்தை என்ன ஆனது, எப்படி வர்த்தகமாயின என்பதைப் பார்க்கவில்லை என்றால் எப்படி?

வாருங்கள், இந்திய சந்தையில் இருந்து தொடங்கி சர்வதேச சந்தைகள் வரை என்ன நிலவரம் என்பதைப் பார்ப்போம். முதலில் இந்தியாவின் சென்செக்ஸில் இருந்தே தொடங்குவோம்.

சென்செக்ஸ்

நேற்று, சென்செக்ஸ், 36,487 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 36,660 புள்ளிகள் கேப் அப்பில்வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தக நேர முடிவில் 36,674 புள்ளிகளைத் தொட்டு 187 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல 36,600 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவடைவது இதுவே முதல் முறை.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,881 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,323 பங்குகள் ஏற்றத்திலும், 1,401 பங்குகள் இறக்கத்திலும், 157 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. இது போக மும்பை பங்குச் சந்தையில் 120 பங்குகள் 52 வார விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

ஜாக்கிரதை டிரேடர்களே

கடந்த 5 நாட்களாக சென்செக்ஸ் தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, உலக பொருளாதாரம் இன்னும் நிலை பெறாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளால், சென்செக்ஸ் திடீரென இறக்கம் காணலாம். எனவே டிரேடர்களும் முதலீட்டாளர்களும் உஷாராக இருக்கவும்.

உலக பங்குச் சந்தைகள்

06 ஜூலை 2020 அன்று, அமெரிக்க நாஸ்டாக் பங்குச் சந்தை 2.21 % ஏற்றத்திலேயே வர்த்தகமானது. 07 ஜூலை, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.50 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.11 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.29 % இறக்கத்திலும் வர்த்தகமானது. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டு இருக்கிறது.

இண்டெக்ஸ்

இந்தியாவில், எஃப் எம் சி ஜி, மெட்டல், பார்மா, பொதுத் துறை வங்கிகள், ரியாலிட்டி போன்ற துறை சார் பங்குகள் கொஞ்சம் மந்தமாகவும், இறக்கத்திலுமே வர்த்தகமாயின. வழக்கம் போல வங்கி, நிதி சேவைகள், ஐடி, தனியார் வங்கிகள் போன்ற துறை சார் இண்டெக்ஸ் பங்குகள் விலை அதிகரித்து சந்தையை ஏற்றத்தில் வர்த்தகமாகச் செய்தன.

பங்கு விலை நிலவரம்

பஜாஜ் ஃபின்கேர், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதானி போர்ட்ஸ், என் டி பி சி, ஐ டி சி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், க்ராசிம் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+