36,765 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்! இன்றாவது ஏற்றத்தில் நிறைவடையுமா?

சில நாட்களுக்கு முன்பு, 39,000 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருந்த சென்செக்ஸ், இன்று 37,000 புள்ளிகளைத் தொடவே தடுமாறிக் கொண்டு இருக்கிறது. நேற்று மாலை, சென்செக்ஸ் 36,553 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 36,991 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது.

36,765 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்! இன்றாவது ஏற்றத்தில் நிறைவடையுமா?

அதன் பின் உச்சபட்சமாக 37,034 புள்ளிகள் வரை தான் அதிகரித்தது. தற்போது, நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 212 புள்ளிகள் சரிந்து 36,765 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகளின் நிலவரம் என்ன? வெளிநாட்டுப் பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன? வாங்க பாப்போம்.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 28 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மீதமுள்ள 2 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,194 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,442 பங்குகள் ஏற்றத்திலும், 620 பங்குகள் விலை இறக்கத்திலும், 132 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 56 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

இண்டெக்ஸ்

இன்று மீடியா, பொதுத் துறை வங்கி தவிர மற்ற எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக ஆட்டோமொபைல், எஃப் எம் சி ஜி, ஐடி, ரியாலிட்டி போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் ஒரு சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இது ஒட்டு மொத்த சென்செக்ஸ் ஏற்றத்துக்கு காரணமாக இருக்கின்றன.

ஆசிய பங்குச் சந்தைகள்

இன்று (25 செப்டம்பர் 2020) ஆசியாவில், தைவானின் தைவான் வெயிடெட், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற எல்லா முக்கிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் அதிகபட்சமாக 1.4 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்

நேற்று (24 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 1.3 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.83 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.29 % இறக்கத்திலும் வர்த்தகமானது. நேற்று அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 0.37 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+