கொரோனா கொடுத்த அதிர்வலைகளில் இருந்து, இன்னும் சென்செக்ஸ் முழுமையாக மீளவில்லை. 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சுமாராக 42,250 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டிருந்த சென்செக்ஸ், தட தடவென 24 மார்ச் 2020-ல் 25,650 புள்ளிகள் வரை சரிந்தது.

இந்த பெரிய சரிவுக்குப் பின், சென்செக்ஸ் தொட்ட உச்சப் புள்ளி என்றால், அது கடந்த 30 ஏப்ரல் 2020 அன்று தொட்ட 33,887 புள்ளிகள் தான். ஆனால் இந்த ஏற்றமும் தொடரவில்லை.
மே மாதம் முதல், தொடர்ந்து சென்செக்ஸில் சரிவு தான். ஆனால் இப்போது மீண்டும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் 32,000 புள்ளிகளுக்கு மேல் இரண்டாவது நாளாக சென்செக்ஸ் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸ்
நேற்று மாலை சென்செக்ஸ், 32,200 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 32,041 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தக நேர முடிவில் 32,424 புள்ளிகளைத் தொட்டு 223 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் இரண்டாவது நாளாக தொடர்ந்து சென்செக்ஸ் 32,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றாத்துடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,511 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,419 பங்குகள் ஏற்றத்திலும், 931 பங்குகள் இறக்கத்திலும், 161 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
உலக பங்குச் சந்தைகள்
மே 29, 2020 இன்று லண்டனின் எஃப் டி எஸ் இ 1.03% இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.34 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.84 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. உலக சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்ற போதும், சென்செக்ஸ் ஏற்றத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கு விலை நிலவரம்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், விப்ரோ, கோல் இந்தியா, ஓ என் ஜி சி, பி பி சி எல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், டி சி எஸ், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications