கடந்த 10 ஆகஸ்ட் 2020 அன்று சென்செக்ஸ் 38,168 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. இந்த வாரத்தில் அதிகபட்சமாக 38,556 புள்ளிகளைத் தொட்டது.
அதற்கு மேல் சென்செக்ஸ் ஏற்றம் காணவில்லை. ஆனால் கொரோனாவுக்குப் பிறகான சென்செக்ஸ் ஏற்றத்தில், 38,617 புள்ளிகளைத் தொட்டது சென்செக்ஸ்.
இன்றும் சென்செக்ஸ் 38,540 புளிகளிலேயே தடுமாறிக் கொண்டு இருக்கிறது. 38,600 புள்ளிகளைக் கூட தொடாது போல் இருக்கிறது. சரி இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன? எந்த பங்குகள் நல்ல விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன? வாருங்கள் பார்போம்.
சென்செக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் இண்டெக்ஸ் நேற்று மாலை 38,310 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 38,432 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 38,540 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது நேற்றைய குளோசிங் புள்ளிகளை விட 230 புள்ளிகள் ஏற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,708 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,425 பங்குகள் ஏற்றத்திலும், 1,172 பங்குகள் இறக்கத்திலும், 142 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 139 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
கோல் இந்தியா, டாடா ஸ்டீல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஜி எண்டர்டெயின்மெண்ட், சன் பார்மா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஈஷர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று 14 ஆகஸ்ட் 2020, ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, சீனாவின் ஷாங்காய் காம்போசைட், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், தைவானின் தைவான் வெயிடெட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. சீனாவின் ஷாங்காய் காம்போசைட் அதிகபட்சமாக 1.19 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
உலக பங்குச் சந்தைகள்
13 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 0.27 % ஏற்றத்தில் வர்த்தகமானது. 14 ஆகஸ்ட், 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.66 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.57 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.97 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications