1,432 புள்ளிகள் ரீபவுண்ட்! ஏற்றத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்!

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நேரத்தில் திடீரென சென்செக்ஸ் 32,348 புள்ளிகள் வரை சரிந்து எல்லா வர்த்தகர்களையும் மிரள வைத்தது. ஆனால் சென்செக்ஸ் மெல்ல ஏற்றம் கண்டு வர்த்தக நேர முடிவில் 33,780 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

சுமாராக 242 புள்ளிகள் ஏற்றம் தான் என்றாலும் 32,348 புள்ளிகளில் இருந்து ரீபவுண்ட் ஆன புள்ளிகளைக் கணக்கிட்டால் 1,432 புள்ளிகள் வருகிறது. இது ஒரு பெரிய விஷயம் தான். ஆக சந்தையில் முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும், சந்தை ஏற்றம் காணும் என பாசிடிவ்வாக இருப்பதையே இது உணர்த்துகிறது.

சரி இன்று இந்தியா மற்றும் உலக பங்குச் சந்தை நிலவரம் என்ன என்பதைப் பார்ப்போம்.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

நேற்று மாலை சென்செக்ஸ், 33,538 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 32,436 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் குறைந்தபட்ச புள்ளியாக 32,348 புள்ளிகள் வரைத் தொட்டது. ஆனால் மீண்டும் பிரமாதமான ஏற்றம் கண்டு, 33,780 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக, 242 புள்ளிகள் ஏற்றாம்.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,653 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,235 பங்குகள் ஏற்றத்திலும், 1,264 பங்குகள் 154 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 51 பங்குகள் தங்களின் கடந்த 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

ஜூன் 12, 2020 அன்று, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.49 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.83 சதவிகிதமும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.01 % ஏற்றத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. ஆசியாவில் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா தவிர மற்ற எல்லா சந்தைகளிலும் ரத்தக் களரி தான். இருப்பினும் சென்செக்ஸ் ஏற்றத்தில் நிறைவடைந்து இருப்பது, இந்திய சந்தை முதலீட்டாளர்களின் பாசிட்டிவிட்டியைக் காட்டுகிறது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

மஹிந்திரா & மஹிந்திரா, பார்தி இன்ஃப்ராடெல், ஸ்ரீ சிமெண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஓ என் ஜி சி, ஜி எண்டர்டெயின்மெண்ட், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன், விப்ரோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+