கடந்த வெள்ளிக் கிழமை மாலை, சென்செக்ஸ், 38,434 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,566 புள்ளிகளில், வர்த்தகமாகத் தொடங்கியது.
அதிகபட்சமாக 38,683 புள்ளிகளைத் தொட்டு 249 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இன்று மும்பை பங்குச் சந்தையில் எத்தனை பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன? முக்கிய கம்பெனி பங்குகளில் எவைகள் எல்லாம் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன? உலக சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
இண்டெக்ஸ்கள் வர்த்தகம்
இன்று ஐடி மற்றும் பார்மா தவிர மற்ற எல்லா செக்டார் சார்ந்த இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தனியார் வங்கி, வங்கி, நிதி சேவைகள், போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாகி, ஒட்டு மொத்த சென்செக்ஸையும் ஏற்றம் காண உதவியாக இருக்கின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,549 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,521 பங்குகள் ஏற்றத்திலும், 873 பங்குகள் விலை இறக்கத்திலும், 155 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 168 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
ஈஷர் மோட்டார்ஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட், கோட்டக் மஹிந்திரா, யு பி எல், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பார்தி இன்ஃப்ராடெல், பார்தி ஏர்டெல், என் டி பி சி, டெக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (24 ஆகஸ்ட் 2020), ஆசியாவின் வர்த்தகமாகும் அனைத்து பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஹாங்காங்கின் ஹேங்செங் பங்குச் சந்தை 1.36 % ஏற்ற்த்திலும், தென் கொரியாவின் கோஸ்பி சந்தை 0.74 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
உலக பங்குச் சந்தைகள்
21 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 0.42 % ஏற்றத்தில் வர்த்தகமானது. 21 ஆகஸ்ட், 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.19 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.30 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.51 % இறக்கத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.


Click it and Unblock the Notifications