250 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்! 40,000-ஐத் தொடுமா?

நேற்று (06 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 39,574 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 39,633 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.

வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 39,862 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. தற்போது நேற்றைய குளோசிங் புள்ளியை விட 250 புள்ளிகள் ஏற்றம் கண்டு 39,825 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ். போகிற போக்கைப் பார்த்தால் சென்செக்ஸ் 40,000 தொடும் என எதிர்பார்க்கலாம்.

சென்செக்ஸ் இண்டெக்ஸில் எந்த பங்குகள் எல்லாம் எல்லாம் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின? எந்த செக்டார் இண்டெக்ஸ் எப்படி வர்த்தகமாகின்றன? ஆசிய பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

250 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்! 40,000-ஐத் தொடுமா?

இண்டெக்ஸ்

இன்று வங்கி, ஆட்டோமொபைல், எஃப் எம் சி ஜி, தனியார் வங்கிகள் போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மற்ற இண்டெக்ஸ்கள் எல்லாமே இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக ஐடி, மீடியா, மெட்டல், ரியாலிட்டி போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இருப்பினும் சென்செக்ஸ், ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மீதமுள்ள 14 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,134 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 954 பங்குகள் ஏற்றத்திலும், 1,050 பங்குகள் விலை இறக்கத்திலும், 130 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 100 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

ஆசிய பங்குச் சந்தைகள்

இன்று (07 அக்டோபர் 2020) ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர மற்ற எல்லா முக்கிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. தென் கொரியாவின் கோஸ்பி 0.63 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்

கடந்த வெள்ளிக் கிழமை (06 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.12 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.48 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.61 % ஏற்றத்திலும் வர்த்தகமானது. அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 1.57 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+