நேற்று மாலை சென்செக்ஸ் 39,073 புள்ளிகளில் நிறைவடைந்து எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
இன்று காலை 39,293 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 39,326 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. குறைந்தபட்சமாக 39,220 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது சென்செக்ஸ்.
இன்று சென்செக்ஸில் பங்குகள் விலை நிலவரம் என்ன? ஆசிய சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன? எந்த துறை சார் இண்டெக்ஸ் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது? வாருங்கள் ஒரு ரவுண்ட் பார்ப்போம்.
பங்கு விலை நிலவரம்
இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச் டி எஃப் சி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, சிப்லா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், ஈஷர் மோட்டார்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,461 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,378 பங்குகள் ஏற்றத்திலும், 953 பங்குகள் விலை இறக்கத்திலும், 130 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 132 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (27 ஆகஸ்ட் 2020, வியாழக்கிழமை), ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்பொசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம், இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, தென் கொரியாவின் கோஸ்பி சந்தை 0.84 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இண்டெக்ஸ்
இன்று, எஃப் எம் சி ஜி மற்றும் மெட்டல் ஆகிய இரண்டு துறைகள் மட்டுமே குட்டி இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ரியாலிட்டி துறை 6.4 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ரியாலிட்டி துறையைத் தொடர்ந்து பார்மா, பொதுத் துறை வங்கி போன்ற துறைகளும் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications