நேற்று மாலை சென்செக்ஸ் 39,113 புள்ளிகளில் நிறைவடைந்து. தொடர்ந்து சென்செக்ஸ் புதிய உச்சங்களைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து கொண்டு இருக்கிறது. எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
இன்று காலை 39,264 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 39,378 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. குறைந்தபட்சமாக 39,235 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது சென்செக்ஸ்.
இன்று சென்செக்ஸில் எந்த பங்குகள் எல்லாம் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? ஆசிய நாட்டில் இருக்கும் பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன? வாருங்கள் ஒரு ரவுண்ட் பார்ப்போம்.

பங்கு விலை நிலவரம்
ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எஸ் பி ஐ, பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஏஷியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன், கோட்டக் மஹிந்திரா, ஹெச் டி எஃப் சி பேங்க், மாருதி சுசூகி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,605 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,359 பங்குகள் ஏற்றத்திலும், 1,109 பங்குகள் விலை இறக்கத்திலும், 137 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 116 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (28 ஆகஸ்ட் 2020, வெள்ளிக்கிழமை), ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, தைவானின் தைவான் வெயிடெட், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம், ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, சிங்கப்பூரின் ஸ்டெரெய்ட் டைம்ஸ் 1.75 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இண்டெக்ஸ்
இன்று, ஆட்டோமொபைல் தவிர மற்ற எல்லா துறை சார்ந்த இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், மீடியா போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி, ஒட்டு மொத்த இந்திய பங்குச் சந்தைகளையும் ஏற்றத்தில் வர்த்தகமாகச் செய்து கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications