கொஞ்சம் பதற்றமாக வர்த்தகமாகத் தொடங்கினாலும், சென்செக்ஸ் மெல்ல ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
நேற்று 38,178-க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் இன்று 38,140-க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது முதலீட்டாளர்களுக்கு ஒரே ஜாலி தான்.
இந்த வாரத்தின் நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ், 1120 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சரி அது என்ன யெஸ் பேங்க் விலை சரிவு?
யெஸ் பேங்க்
யெஸ் பேங்கில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் நீக்கி, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முதலீடு தேவையாக இருந்தது. இந்த முதலீட்டுப் பணத்தை திரட்ட FPO அறிவித்தார்கள். FPO அறிவித்ததில் இருந்து யெஸ் பேங்க் பங்கு விலை தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தது.
பங்கு விலையில் எதிரொலி
FPO-க்கு விண்ணப்பித்தவர்களில் பலரும் 12 ரூபாய்க்கே விண்ணப்பித்து இருப்பதால், யெஸ் பேங்க் பங்கு விலையும் 12 ரூபாய்க்கு போய்விடுமோ என்கிற பயத்தில், யெஸ் பேங்க் பங்கை விற்றுத் தள்ளி இருக்கிறார்கள். ஆனால் வாங்கத் தான் ஆள் இல்லை. எனவே இன்று ஒரே நாளில் யெஸ் பேங்க் 19.18% சரிந்து இருக்கிறது. எந்த பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாயின?
பங்கு விலை நிலவரம்
ஈஷர் மோட்டார்ஸ், எஸ் பி ஐ, ஐ சி ஐ சி ஐ பேங்க், ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்பப்ரேஷன் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆக்ஸிஸ் பேங்க், ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
சென்செக்ஸ் 30 பங்குகள்
சென்செக்ஸ் இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 22 பங்குகள் விலை ஏற்றத்திலும், 08 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,812 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,454 பங்குகள் விலை ஏற்றத்திலும், 1,204 பங்குகள் விலை இறக்கத்திலும், 154 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications