272 புள்ளிகள் ஏற்றத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்! 38,900-ல் சந்தை!

நேற்று ஜூன் 2020 காலாண்டுக்கான, இந்திய பொருளாதார ஜிடிபி சரியும் என்கிற செண்டிமெண்டால், ஒரே நாளில் 839 புள்ளிகள் சரிவைக் கண்டது சென்செக்ஸ்.

இன்று காலை 38,754 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 39,226 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமான சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில் 38,900 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.

சரி இன்றைய சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் பங்குகளில், எந்தெந்த பங்குகள் எல்லாம் நன்றாக விலை ஏற்றம் கண்டு வர்த்தகமாயின? உலக சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏஷியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், என் டி பி சி போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஓ என் ஜி சி, ஆக்ஸிஸ் பேங்க், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,818 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,199 பங்குகள் ஏற்றத்திலும், 1,458 பங்குகள் விலை இறக்கத்திலும், 161 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 81 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.

ஆசிய பங்குச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகள்

இன்று (01 செப்டம்பர் 2020), ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட்
தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம், ஏற்றத்தில் வர்த்தகமாயின. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 1.38 % ஏற்றம் கண்டு இருக்கிறது. தென் கொரியாவின் கோஸ்பி 1.01 % ஏற்றம் கண்டு இருக்கிறது.

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள்

இன்று (01 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 1.17 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.45 % எற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.75 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+