34,109-ல் நிறைவடைந்த Sensex! கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை!

கொரோனா வந்த பின் Sensex, கடந்த மார்ச் 24, 2020 அன்று சென்செக்ஸ் 25,650 புள்ளிகளைத் தொட்டது.

இந்த சரிவில் இருந்து சென்செக்ஸ், மெல்ல அதிகரித்து, கடந்த 30 ஏப்ரல் 2020 அன்று 33,887 என்கிற உச்சப் புள்ளியைத் தொட்டது. அதற்குப் பின் மே மாதத்தில் சென்செக்ஸ், இந்த உச்சப் புள்ளிகளைத் தொட முடியாமல் திணறியது.

ஆனால் இன்று, அந்த உச்சப் புள்ளியை உடைத்துக் கொண்டு 34,109 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது சென்செக்ஸ்! சரி இன்று சென்செக்ஸ் நிலவரம் என்ன?

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

நேற்று மாலை சென்செக்ஸ், 33,825 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 34,185 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தக நேர முடிவில் 34,109 புள்ளிகளைத் தொட்டு 284 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சென்செக்ஸ், தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைவது இது ஆறாவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 நாள் சார்ட்

1 நாள் சார்ட்

சென்செக்ஸின் 1 நாள் டெக்னிக்கல் சார்ட்டைப் பார்த்தால், ஒரு கப் அண்ட் சாசர் பேட்டன் உருவாகி இருக்கிறது. எனவே, சென்செக்ஸ் மேலும் ஏற்றம் காண அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி 34,500 புள்ளியை டார்கெட்டாகச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே சென்செக்ஸ் மெல்ல ஏற்றம் கண்டு கொண்டே இருக்கிறது. ஒருவேளை 34,500 புள்ளிகளை அசால்டாக கடந்து விட்டால் 34,770 அடுத்த ரெசிஸ்டென்ஸாக இருக்கலாம்.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,659 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,658 பங்குகள் ஏற்றத்திலும், 860 பங்குகள் இறக்கத்திலும், 141 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மும்பை பங்குச் சந்தையில், சுமாராக 50 பங்குகள் தன் 52 வார கால உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

ஜூன் 03, 2020 இன்று லண்டனின் எஃப் டி எஸ் இ 0.83 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.65 % ஏற்றத்திலும், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஜெர்மனி பங்குச் சந்தை 2.08 % ஏற்றத்திலும், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் ஏற்றம், இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்ததைத் தான் வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்ததைப் பார்த்தாலே புரிகிறதே.

அள்ளிக் கொடுத்த பொதுத் துறை வங்கிகள்

அள்ளிக் கொடுத்த பொதுத் துறை வங்கிகள்

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களிலேயே பொதுத் துறை வங்கி இண்டெக்ஸ் தான் அதிகபட்சமாக 5.12 சதவிகிதம் ஏற்றம் கண்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நிஃப்டி ரியாலிட்டி இண்டெக்ஸ் 3.13 சதவிகிதம் ஏற்றத்தைக் கண்டு இந்தியப் பங்குச் சந்தைகளின் ஏற்றத்தை உறுதி செய்து இருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+