நேற்று மாலை சென்செக்ஸ் 38,050 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 38,084 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 38,352 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸ், கொரோனா சரிவுக்குப் பிறகு தொட்ட அதிகபட்ச புள்ளியே 38,617 தான். ஆனால் கடந்த வாரத்தில் 38,556 புள்ளிகளைத் தான் அதிகபட்சமாகத் தொட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரி இன்று மும்பை பங்குச் சந்தையில் எந்த முக்கிய கம்பெனி பங்குகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? உலக பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

ஆசிய சந்தைகள்
இன்று 18 ஆகஸ்ட் 2020, ஆசியாவில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் அதிகபட்சமாக 0.74 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
உலக பங்குச் சந்தைகள்
17 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 1.0 % ஏற்றத்தில் வர்த்தகமானது. 18 ஆகஸ்ட், 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.49 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.37 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 030 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 19 பங்குகள் ஏற்றத்திலும், 11 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,700 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,635 பங்குகள் ஏற்றத்திலும், 912 பங்குகள் விலை இறக்கத்திலும், 153 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 147 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
க்ராசிம், அல்ட்ராடெக் சிமெண்ட், யூ பி எல், ஓ என் ஜி சி, ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. டெக் மஹிந்திரா, பி பி சி எல், இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச் சி எல் டெக், சிப்லா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.


Click it and Unblock the Notifications