ஜூன் மாதத்தின் நான்காவது வாரம் ஒரு வழியாக ஏற்றத்தில் நிறைவடைந்து இருக்கிறது சென்செக்ஸ்.
ஆனால் மீண்டும் ஒரு கொரோனாவுக்குப் பிறகான் உச்சத்தைத் தொட்டு நிறைவடையவில்லை என்கிற வருத்தமும் நம் முதலீட்டாளர்களுக்கு நிறையவே இருக்கிறது.
சரி இன்று சென்செக்ஸில் என்ன நடந்தது, உலக சந்தைகளின் நிலவரம் என்ன? எந்த பங்குகள் தூள் கிளப்பின..? வாருங்கள் வரிசையாகப் பார்ப்போம்.

சென்செக்ஸ் நிலை என்ன
நேற்று மாலை சென்செக்ஸ், 34,842 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 35,144 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் 34,910 புள்ளிகள் வரைத் தொட்டு லைட்டாக முதலீட்டாளர்கள் வயிற்றில் பகீர் கிளப்பியது. ஆனால் வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ், கொஞ்சம் ஏற்றம் கண்டு 35,171 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 329 புள்ளிகள் ஏற்றம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், வெறும் 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,865 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,619 பங்குகள் ஏற்றத்திலும், 1,097 பங்குகள் இறக்கத்திலும், 149 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 130 பங்குகள் தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.
உலக பங்குச் சந்தைகள்
இன்று, ஜூன் 26, 2020 இன்று லண்டனின் எஃப் டி எஸ் இ 1.58 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.58 சதவிகிதமும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.92 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவில் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. இது கூட நம் இந்திய சந்தைகள் ஏற்றத்துக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
பங்கு விலை நிலவரம்
இன்ஃபோசிஸ், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், டிசிஎஸ், இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இன்ஃப்ராடெல், ஐ டி சி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், கோட்டக் மஹிந்திரா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications