சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் இந்த வார தொடக்கத்தில் 36,939 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது. தற்போது மீண்டும் தன் 38,000 புள்ளிகளைத் தொட்டு சென்செக்ஸ் நிறைவடைந்து இருக்கிறது.
நேற்று வர்த்தக நேர முடிவில் 37,663 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலையில் சென்செக்ஸ் 37,946 புள்ளிகளில் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆர்பிஐ வட்டி விகித அறிவிப்புகளுக்குப் பின், சென்செக்ஸ் நல்ல ஏற்றம் கண்டு, அதிகபட்சமாக 38,221 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது.
சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 38,025 புள்ளிகளில் நிறைவடைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
பி ஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,830 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,558 பங்குகள் ஏற்றத்திலும், 1,109 பங்குகள் இறக்கத்திலும், 163 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 162 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் கெயில், ஹெச் சி எல் டெக், யூ பி எல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஈஷர் மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்ஹிரா, பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஆசிய சந்தைகள்
இன்று 06 ஆகஸ்ட் 2020, ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஹாங்காங்கின் ஹேங்செங், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக தென் கொரியாவின் கோஸ்பி 1.33 % ஏற்றத்தில் வர்த்தகமானது.
உலக பங்குச் சந்தைகள்
05 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 0.52 % ஏற்றத்தில் வர்த்தகமானது. 06 ஆகஸ்ட், 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.77 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.30 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.88 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications