கடந்த சில வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் ஏற்றம் கண்டு வருகிறது. இன்றும் சென்செக்ஸ் தன் பழைய உச்சமான (கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகான உச்சம்) 38,617 புள்ளிகளைக் கிட்டத்தட்ட தொடும் தூரம் வரைப் போய் இருக்கிறது.
விரைவில் சென்செக்ஸ் 38,617 புள்ளிகளைக் கடக்கும் என எதிர்பார்க்கலாம். சரி இன்று சென்செக்ஸ் 30-யில் வர்த்தகமாகும் பங்கு விலை நிலவரம் என்ன? உலக சந்தைகள் மற்றும் ஆசிய சந்தைகள் நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,669 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,491 பங்குகள் ஏற்றத்திலும், 1,041 பங்குகள் இறக்கத்திலும், 137 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 184 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
ஜி எண்டர்டெயின்மெண்ட், ஐடிசி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஸ்ரீ சிமெண்ட்ஸ், டைடன் கம்பெனி, சிப்லா, யூ பி எல், டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டரீஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று 11 ஆகஸ்ட் 2020, ஆசியாவில், சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், தைவானின் தைவான் வெயிடெட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஹாங்காங்கின் ஹேங்செங் % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
உலக பங்குச் சந்தைகள்
10 ஆகஸ்ட் 2020 அன்று, அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 0.39 % இறக்கத்தில் வர்த்தகமானது. 11 ஆகஸ்ட், 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.33 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.58 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.48 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications