கடந்த வாரத்தில் சென்செக்ஸ் பலத்த இறக்கம் கண்டு வர்த்தகமானது. வெள்ளிக்கிழமை மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமனது. நேற்று மாலை, சென்செக்ஸ் 37,388 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,756 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது.
இன்று சென்செக்ஸ் உச்சபட்சமாக 37,810 புள்ளிகள் வரை அதிகரித்தது. தற்போது, நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 384 புள்ளிகள் அதிகரித்து 37,773 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பங்குகளின் நிலவரம் என்ன? வெளிநாட்டுப் பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகின்றன? வாங்க பாப்போம்.
இண்டெக்ஸ்
இன்று எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி, ஆட்டோமொபைல், நிதி சேவைகள், மீடியா, மெட்டல் போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் இரண்டு சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இது ஒட்டு மொத்த சென்செக்ஸ் ஏற்றத்துக்கு காரணமாக இருக்கின்றன.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 28 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மீதமுள்ள 2 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,519 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,773 பங்குகள் ஏற்றத்திலும், 611 பங்குகள் விலை இறக்கத்திலும், 135 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 81 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (28 செப்டம்பர் 2020) ஆசியாவில், இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற எல்லா முக்கிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. தைவானின் தைவான் வெயிடெட் 1.88 % ஏற்றத்திலும், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 1.55 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்
கடந்த வெள்ளிக் கிழமை (25 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.34 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.69 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.09 % இறக்கத்திலும் வர்த்தகமானது. அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 2.26 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.