கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிறது. கடந்த பிப்ரவரி 2020-ல் தான் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது, அதன் பிறகு, இன்று தான் 40,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிறது.
நேற்று (07 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 39,878 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,204 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,393 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. தற்போது நேற்றைய குளோசிங் புள்ளியை விட 459 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,338 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.
சென்செக்ஸில் எந்த பங்குகள் எல்லாம் எல்லாம் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? எந்த செக்டார் இண்டெக்ஸ் எப்படி வர்த்தகமாகின்றன? ஆசிய பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மீதமுள்ள 08 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-யில் 2,227 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,262 பங்குகள் ஏற்றத்திலும், 848 பங்குகள் விலை இறக்கத்திலும், 117 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 98 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
டாப் 30 பங்குகள் ஏற்றம் இறக்கம்
டிசிஎஸ், ஹெச் சி எல், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஓ என் ஜி சி, டைடன், ஏஷியன் பெயிண்ட், ஐ டி சி, லார்சன் & டியூப்ரோ போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
இண்டெக்ஸ்
இன்று எல்லா செக்டார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக ஐடி மட்டும் 3.83 சதவிகிதம் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. வங்கி, மீடியா, பொதுத் துறை வங்கிகள், ரியாலிட்டி போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. சென்செக்ஸ், வெறி கொண்ட வேங்கை போல ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
ஆசிய பங்குச் சந்தைகள்
இன்று (08 அக்டோபர் 2020) ஆசியாவில், சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், ஹாங் காங்கின் ஹேங்செங், தவிர மற்ற எல்லா முக்கிய பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக ஜப்பானின் நிக்கி 1.04 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள்
நேற்று (07 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.06 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.27 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.17 % ஏற்றத்திலும் வர்த்தகமானது. அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை 1.88 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications