36,000-த்தை நோக்கி சென்செக்ஸ்! நல்ல ஏற்றத்தில் சந்தை!

35,000 புள்ளிகளைக் கடக்க முக்கிக் கொண்டு இருந்த சென்செக்ஸ், திடீரென ஹீரோ போல, 36,000 புள்ளிகளை நோக்கி இன்று பறந்து கொண்டு இருக்கிறது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 35,928 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதும், முதலீட்டாளர்களை சிலிர்க்கச் செய்து கொண்டு இருக்கிறது.

36,000-த்தை நோக்கி சென்செக்ஸ்! நல்ல ஏற்றத்தில் சந்தை!

சரி சென்செக்ஸில் நிலவரம் என்ன? எந்த பங்குகள் எல்லாம் ஏற்றத்திலும், எந்த பங்குகள் எல்லாம் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.? வாருங்கள் பார்ப்போம். முதலில் சென்செக்ஸ் நிலவரத்தில் இருந்து தொடங்குவோம்.

சென்செக்ஸ்

நேற்று சென்செக்ஸ், 35,414 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 35,604 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 35,900 புள்ளிகளைத் தொட்டு 485 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் 100 புள்ளிகள் தான்... 36,000 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டுவிடும்.

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 05 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,736 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,650 பங்குகள் ஏற்றத்திலும், 953 பங்குகள் இறக்கத்திலும், 132 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆக ஒட்டு மொத்தமாக சென்னெக்ஸில் பல பங்குகள் விலை ஏற்றத்துடன் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதையே இது காட்டுகிறது.

உலக பங்குச் சந்தைகள்

01 ஜூலை 2020 அன்று, அமெரிக்க நாஸ்டாக் பங்குச் சந்தை ஏற்றத்திலேயே வர்த்தகமானது. 02 ஜூலை, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.93 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.45 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.82 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஆசிய சந்தைகள்

ஆசியாவில், எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, ஹாங்காங்கின் ஹேங்செங், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் போன்ற பங்குச் சந்தைகள் 2.0 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதான் சென்செக்ஸ் 36,000 புள்ளிகளை நோக்கி பறப்பதைப் பார்க்க முடிகிறதே.

பங்கு விலை நிலவரம்

மஹிந்திரா & மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், இன்ஃபோசிஸ், ஓ என் ஜி சி, இந்தியன் ஆயில் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆக்ஸிஸ் பேங்க், யூ பி எல், ஈஷர் மோட்டார்ஸ், பிரிட்டானியா, ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+