36,500 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்! ஏற்றத்தில் சந்தை!

மீண்டும் சென்செக்ஸ் ஏற்றப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது. 25,650 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமான சென்செக்ஸ், இப்போது 36,500 புள்ளிகளைத் தொட இருக்கிறது.

இந்த ஏற்றத்தையும் வங்கி மற்றும் நிதித் துறை சார்ந்த நிறுவ்னாங்கள் முன்னெடுத்துச் சென்று கொண்டு இருக்கிறது.

சரி சென்செக்ஸில் நிலவரம் என்ன? எந்த பங்குகள் எல்லாம் ஏற்றத்திலும், எந்த பங்குகள் எல்லாம் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? வாருங்கள் பார்ப்போம். முதலில் சென்செக்ஸ் நிலவரத்தில் இருந்து தொடங்குவோம்.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ், 36,021 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 36,313 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 36,408 புள்ளிகளைத் தொட்டு 387 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் சுமாராக 100 புள்ளிகள் தான்... 36,500 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டுவிடும்.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 05 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,066 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,269 பங்குகள் ஏற்றத்திலும், 685 பங்குகள் இறக்கத்திலும், 112 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆக ஒட்டு மொத்தமாக சென்னெக்ஸில் பல பங்குகள் விலை ஏற்றத்துடன் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதையே இது காட்டுகிறது.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

02 ஜூலை 2020 அன்று, அமெரிக்க நாஸ்டாக் பங்குச் சந்தை ஏற்றத்திலேயே வர்த்தகமானது. 03 ஜூலை, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.33 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.84 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.64 % இறக்கத்திலும் வர்த்தகமானது. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டு இருக்கிறது.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

ஆசியாவில், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் தவிர, மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, சீனாவின் ஷாங்காய் காம்போசைட் பங்குச் சந்தை 4.24 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஹாங்காங்கின் ஹேங்செங் பங்குச் சந்தை 3.45 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இண்டெக்ஸ்

இண்டெக்ஸ்

இந்தியாவில், பார்மா துறை சார்ந்த பங்குகள் கொஞ்சம் மந்தமாகவும், இறக்கத்திலுமே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. வழக்கம் போல, வங்கி, நிதி சேவைகள், தனியார் வங்கிப் பங்குகள் தான் சந்தையை ஏற்றத்தில் வர்த்தகமாகச் செய்து கொண்டு இருக்கின்றன. எனவே பார்த்து ஜாக்கிரதையாக வர்த்தகத்தை மேற்கொள்ளவும்.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

ஹெச் டி எஃப் சி பேங்க், மஹிந்திரா & மஹிந்திரா, இண்டஸ் இண்ட் பேங்க், க்ராசிம், டெக் மஹிந்திரா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஐ டி சி, பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, பவர் கிரிட் கார்ப், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+