ரிலையன்ஸ், டிசிஎஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், ஐ சி ஐ சி ஐ பேங்க் போன்ற ஹெவி வெயிட் பங்குகள் விலை ஏறியதால், சென்செக்ஸ் இண்டெக்ஸும் நல்ல ஏற்றம் கண்டு இருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்தமாக சந்தையில் வர்த்தகமான பங்குகளைப் பார்த்தால் அத்தனை ஏற்றம் கண்டதாகத் தெரியவில்லை.

சரி சென்செக்ஸ் எப்படி வர்த்தகமானது. உலக சந்தைகள் எப்படி வர்த்தகமாகிறது. அதிகம் விலை ஏறிய பங்குகள் விவரங்கள்... என எல்லாவற்றையும் ஒரு ரவுண்ட் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலை என்ன
நேற்று மாலை சென்செக்ஸ், 34,915 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 35,009 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் 34,927 புள்ளிகள் வரைத் தொட்டது. ஆனால் வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ், கொஞ்சம் ஏற்றம் கண்டு 35,414 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 498 புள்ளிகள் ஏற்றம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,906 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,481 பங்குகள் ஏற்றத்திலும், 1,305 பங்குகள் இறக்கத்திலும், 120 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 133 பங்குகள் தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.
உலக பங்குச் சந்தைகள்
இன்று, ஜூலை 01, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 0.34 % ஏற்றாத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.45 சதவிகிதம் ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.11 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவில் ஜப்பானின் நிக்கி மற்றும் கொரியாவின் கோஸ்பி தவிர, மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதில் நம் சென்செக்ஸும் ஒன்று.
பங்கு விலை நிலவரம்
ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், யூ பி எல், ஹெச் டி எஃப் சி, பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மஹிந்திரா & மஹிந்திரா, என் டி பி சி, நெஸ்லே, சிப்லா, லார்சன் & டியூப்ரோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications