38,000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்! புலிப் பாய்ச்சலில் சந்தை!

இந்த வாரம் ஏற்றத்துக்கான வார போலவே தெரிகிறது. கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் சென்செக்ஸ் 37,020 புள்ளிகளில் நிறைவடைந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளே, 37,418 புள்ளிகளில் நிறைவடைந்து மேலும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து இருக்கிறது.

இன்று 37,823 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, முதலீட்டாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச் சென்று இருக்கிறது.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

20 ஜூலை 2020 அன்று, அமெரிக்க நாஸ்டாக் பங்குச் சந்தை 2.51 % ஏற்றத்திலேயே வர்த்தகமானது. 02 ஜூலை, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.46 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.47 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.99 % ஏற்றத்திலும் வர்த்தகமானது. இங்கிலாந்தைத் தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றம் கண்டு இருக்கின்றன.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

இன்று 21 ஜூலை 2020, ஆசியாவில், எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, தைவானின் தைவான் வெயிடெட் 2.11 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஹாங்காங்கின் ஹேங்செங் பங்குச் சந்தை 1.79 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

நேற்று சென்செக்ஸ், 37,418 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,823 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 37,923 புள்ளிகளைத் தொட்டு 505 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் சுமாராக 80 புள்ளிகள் தான்... 38,000 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டுவிடும்.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 10 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,238 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,299 பங்குகள் ஏற்றத்திலும், 827 பங்குகள் இறக்கத்திலும், 112 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக மும்பை பங்குச் சந்தையில், பல பங்குகள் விலை ஏற்றத்துடன் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதையே இது காட்டுகிறது.

 பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

பி பி சி எல், ஈஷர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், ஐ ஒ சி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பார்தி இன்ஃப்ராடெல், ஜி எண்டர்டெயின்மெண்ட், பிரிட்டானியா, ஹிண்டால்கோ, சிப்லா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+