கொரோனா வைரஸ் பற்றிய பயம் சந்தையைப் பிடித்து இருந்த போது, சென்செக்ஸ் குறைந்தபட்சமாக 25,650 லெவல்களைத் தொட்டு வர்த்தகமானது.
அதன் பின் மெல்ல ஏற்றம் கண்டு 34,000 புள்ளிகளை கடந்த 03 ஜூன் 2020 அன்று தொட்டு வர்த்தகமானது. மீண்டும் ஏற்ற இறக்கம் என எல்லாம் சேர்ந்து தற்போது 35,000 புள்ளிகளைக் கடந்து இருக்கிறது சென்செக்ஸ்.
கொரோனா வைரஸ் பிரச்சனைக்குப் பின், சென்செக்ஸ் 35,000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி, இன்று பங்குச் சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் ஒரு ரவுண்ட் அப் பார்ப்போம்.
சென்செக்ஸ் நிலை என்ன
நேற்று மாலை சென்செக்ஸ், 34,911 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 35,015 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் 34,893 வரைத் தொட்டு சின்ன பதற்றாத்தை உருவாக்கியது. ஆனால் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது சென்செக்ஸ். வர்த்தக நேர முடிவில் 35,403 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் உடன் ஒப்பிட்டால் 519 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 27 பங்குகள் ஏற்றத்திலும், வெறும் 03 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. கடந்த சில வர்த்தக நாட்களில் ஹீரோவாக வலம் வந்த ரிலையன்ஸ் பங்கு விலை இன்று 1.5% விலை சரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்இ-யில் 2,876 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,968 பங்குகள் ஏற்றத்திலும், 757 பங்குகள் இறக்கத்திலும், 151 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
உலக பங்குச் சந்தைகள்
நேற்று நாஸ்டாக் 1.1 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஜூன் 23, 2020 லண்டனின் எஃப் டி எஸ் இ 1.15 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.5 சதவிகிதமும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.56 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசியாவில் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா தவிர தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின.
இண்டெக்ஸ்
நிஃப்டியின் செக்டோரியல் இண்டெக்ஸில் எல்லா துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. ஆனால் வங்கி, மீடியா, ரியாலிட்டி போன்ற துறைகள் தான் அதிகம் விலை ஏறி, ஒட்டு மொத்த சந்தைகளையும் உயரச் செய்து இருக்கின்றன. இருப்பதிலேயே நிஃப்டி ஆட்டோ துறை சார் இண்டெக்ஸ் தான் 0.89 % என குறைவான ஏற்றத்தைக் கண்டது.
பங்கு விலை நிலவரம்
லார்சன் & டியூப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், என் டி பி சி, ஹிண்டால்கோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், மாருதி சுசூகி, வேதாந்தா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications