இந்த வாரத்தில் 573 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்!

ஜூலை 03 அன்று 36,021 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ், இந்த வாரத்தில் 36,594 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த ஒரு வார காலத்தில் அதிகபட்சமாக 36,828 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது. அதே போல 36,234 புள்ளிகள் வரை இறக்கம் கண்டதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியோ இந்த வாரத்தை 573 புள்ளிகள் ஏற்றத்தில் முடித்து இருக்கிறது சென்செக்ஸ். சரி இன்றைய சென்செக்ஸ் மற்றும் பங்குகள் விலை விவரத்துக்கு வருவோம்.

இன்று விலை எகிறிய பங்குகள்

இன்று விலை எகிறிய பங்குகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, ஹிந்துஸ்தான் யுனிலிவர், பிரிட்டானியா, பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் விலை ஏற்றம் கண்டன. ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், டைடன் கம்பெனி, கெயில், ஹெச் டி எஃப் சி போன்ற கம்பெனி பங்குகள் விலை இறக்கம் கண்டன.

எந்த துறை

எந்த துறை

இன்று பங்குச் சந்தையில் எஃப் எம் சி ஜி, ஐடி, பார்மா, ரியாலிட்டி தவிர மற்ற எல்லா துறை சார்ந்த இண்டெக்ஸும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ஒட்டு மொத்தமாக வங்கித் துறை, நிதி சேவைகள் எல்லாம் படு பயங்கரமாக சரிந்து இருக்கின்றன.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

நேற்று, சென்செக்ஸ், 36,737 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 36,555 புள்ளிகள் கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தக நேர முடிவில் 36,594 புள்ளிகளைத் தொட்டு 143 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 9 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,833 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,000 பங்குகள் ஏற்றத்திலும், 1,663 பங்குகள் இறக்கத்திலும், 170 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. இது போக மும்பை பங்குச் சந்தையில் 111 பங்குகள் 52 வார விலை ஏற்றத்தைத் தொட்டு வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

10 ஜூலை, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 0.55 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.47 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.50 % ஏற்றத்தில் வர்த்தகமானது. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. ஆசிய சந்தைகளில் சிங்கப்பூரின் தவிர மற்ற சந்தைகள் எல்லா சந்தைகளும் இறக்கம் கண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+