கடந்த வெள்ளிக்கிழமை மாலை, சென்செக்ஸ் 38,357 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 38,284 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 38,519 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 38,060 புள்ளிகளையும் தொட்டு வர்த்தகமானது சென்செக்ஸ்.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 38,417 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சரி, இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன? ஐரோப்பிய பங்குச் சந்தைகள் எப்படி வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? வாருங்கள் பார்ப்போம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் விலை ஏற்றத்திலும், 12 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் மொத்தம் 2,913 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,190 பங்குகள் ஏற்றத்திலும், 1,547 பங்குகள் விலை இறக்கத்திலும், 176 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 112 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், ஹிந்துஸ்தான் யுனிலிவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐ டி சி, ஏஷியன் பெயிண்ட்ஸ், ஹெச் டி எஃப் சி ஏற்றத்தில் வர்த்தகமானது. மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், என் டி பி சி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஓ என் ஜி சி போன்ற பங்குகள் 1.8 சதவிகிதத்துக்கு மேல் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (07 செப்டம்பர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 2.06 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.78 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.71 % இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று ஆசிய சந்தைகளில் சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், தென் கொரியாவின் கோஸ்பி போன்ற சந்தைகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின.
எந்த இண்டெக்ஸ் டாப்
எஃப் எம் சி ஜி, ஐடி, மீடியா போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. இந்த செக்டார்கள் தான், இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்தில் நிறைவடைய முக்கிய காரணமாக இருக்கின்றன. இவை தான் ரியாலிட்டி, தனியார் வங்கி, ஆட்டோமொபைல் போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் கொஞ்சம் கூடுதல் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.


Click it and Unblock the Notifications