செம ஏற்றத்தில் சென்செக்ஸ்! 35,000 தொடுமா?

34,500 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் வர்த்தகமாவது, கொரோனா வைரஸ் சரிவுக்குப் பின், இதுவே முதல் முறை. இதற்கு முன் 33.887 புள்ளிகள் தான் சுமாராக 1 மாத காலத்துக்கு உச்சப் புள்ளியாக இருந்தது.

இந்த ஏற்றத்தை சென்செக்ஸ் தக்க வைத்துக் கொள்ளுமா? அடுத்து 35,000 புள்ளிகளைத் தொடுமா?

இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன? உலக சந்தைகள், கடந்த வெள்ளிக் கிழமை அன்று எப்படி வர்த்தகமாகி இருக்கிறது. வாருங்கள் ஒவ்வொரு தலைப்பாக, விரிவாகப் பார்ப்போம்.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

நேற்று மாலை சென்செக்ஸ், 34,287 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 34,841 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸின் அதிகபட்ச புள்ளியாக 34,927 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக, 640 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக நாம் சொன்ன படி சென்செக்ஸ் 34,500 புள்ளிகளை தொட்டுவிட்டது.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,152 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,674 பங்குகள் ஏற்றத்திலும், 386 பங்குகள் 92 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

ஜூன் 05, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 2.06 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. ஜூன் 05, 2020 அன்று, லண்டனின் எஃப் டி எஸ் இ 2.25 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 3.71 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 3.36 % ஏற்றத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. ஆசியாவில் இந்த ஏற்றம் சிறப்பாக பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறது.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

ஆசியாவில் எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் பங்குச் சந்தை 2.55 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஹாங்காங்கின் ஹேங்செங் சந்தை 0.17 % என குறைந்தபட்ச ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக இந்தியாவிலும் இந்த பாசிட்டிவ் செண்டிமெண்ட் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

இண்டஸ் இண்ட் பேங்க், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், கெயில், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பார்தி இன்ஃப்ராடெல், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், சிப்லா, ஸ்ரீ சிமெண்ட், ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

35000 தொடுமா

35000 தொடுமா

காலையில் சென்செக்ஸில் தொடங்கிய ஏற்றம், இப்போது சந்தையிடம் இருப்பதாகத் தெரியவில்லை. சர்வதேச சந்தைகள் எல்லாம் சரமாரியாக அதிகரித்து இருப்பதால் இந்திய சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடையும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் 35,000 புள்ளிகளைத் தொடுவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். இன்று 35,000 புள்ளிகளை தொடவில்லை என்றாலும், ஏதாவது ஒரு வலுவான பாசிட்டிவ் செய்தி வந்தால் கூட, அடுத்த ஒரு வாரத்துக்குள் சென்செக்ஸ் 35,000 புள்ளிகளைத் தொட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+