இந்திய பங்குச் சந்தைகளில் இன்னும் ஒரு நிலையான ஏற்றத்தை எதிர்பார்க்க முடியவில்லை. தொடர்ந்து சின்ன சின்ன ஏற்றங்களும் இறக்கங்களுமாகவே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
இப்போதும் சென்செக்ஸ் 35,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது தான் ஒரே ஆறுதல்.
சரி இன்று சென்செக்ஸ் நிலவரம் என்ன? எந்த பங்குகள் எல்லாம் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது? உலக பங்குச் சந்தை நிலவரம் என்ன? வாருங்கள் ஒரு ரவுண்ட் பார்ப்போம்.
சென்செக்ஸ்
நேற்று மாலை சென்செக்ஸ், 35,430 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 35,679 புள்ளிகள் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 35,507 புள்ளிகளைத் தொட்டு 77 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 35,000 புள்ளிகளில் விடாபிடியாக நிற்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.
பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்கு மட்டுமே ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,480 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,407 பங்குகள் ஏற்றத்திலும், 948 பங்குகள் இறக்கத்திலும், 125 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக பங்குச் சந்தைகள்
நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகள் ஓரளவுக்கு ஏற்றத்திலேயே வர்த்தகமாயின. நேற்று ஜூன் 23, 2020, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.21 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.39 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 2.13 % ஏற்றத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
ஆசியாவில் சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி தவிர மற்ற பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக, கொரியாவின் கோஸ்பி பங்குச் சந்தை 1.64 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 1.81 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இருப்பினும் இந்திய சந்தைகள் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
ஏஷியன் பெயிண்ட்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், ஐ டி சி, டாடா மோட்டார்ஸ் டைடன் கம்பெனி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பவர் கிரிட் கார்ப்பரேஷன், சிப்லா, சன் பார்மா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications