பட்ஜெட் கடந்த பிப்ரவரி 01, 2020 சனிக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் இந்தியாவின் பங்குச் சந்தைகளான பி எஸ் இ மற்றும் என் எஸ் இ ஆகிய சந்தைகள் பங்கு வர்த்தகத்துக்கு திறந்து இருந்தன.
பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் கொரோனா வைரஸின் கோரத்தால் சென்செக்ஸ் ஒரே நாளில் 1,000 புள்ளிகள் சரிந்து, மத்திய அரசுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அடி வயிற்றில் அள்ளு கிளப்பியது.

அன்று சரிந்த சரிவு, கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 40,000 என்கிற வலுவான சப்போர்ட்டை உடைத்துக் கொண்டு சரிந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சரிவை எல்லாம் சமன் செய்யும் விதத்தில், இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் சுமாராக 800 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நேற்று மாலை சென்செக்ஸ் 39,872 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,178 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், அடுத்த சில நிமிடங்களில், சென்செக்ஸ் தன் இன்றைய நாளுக்கான அதிகபட்ச புள்ளிகளை நோக்கி உயரத் தொடங்கிவிட்டன. இன்றைக்கு அதிகபட்சமாக 40,767 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 11,786 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 11,969 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நிஃப்டி சுமாராக 261 புள்ளிகள் ஏற்றத்தில் இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 28 பங்குகள் ஏற்றத்திலும், 02 பங்குகள் மட்டுமே இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,547 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,555 ஏற்றத்திலும், 811 பங்குகள் இறக்கத்திலும், 181 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் 2,547 பங்குகளில், 73 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 79 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
இந்தியன் ஆயில், பஜாஜ் ஃபின்சர்வ், ஐ டி சி, பார்தி இன்ஃப்ராடெல், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பஜாஜ் ஆட்டோ, யெஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications