பிரமாதம்! மீண்டும் 33,300 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 30 ஏப்ரல் 2020 அன்று தான் சென்செக்ஸ் கொரோனாவுக்குப் பின் 33,887 புள்ளிகளைத் தொட்டது.

அதன் பின் யார் கண் பட்டதோ, சென்செக்ஸ் 33,000 புள்ளிகளைத் தொட முடியாமல் திணறியது. சுமாராக ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இப்போது சென்செக்ஸ் மீண்டும் 33,300 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது.

சென்செக்ஸ் 33,000 புள்ளிகளைக் கடக்க என்ன காரணம்? இன்று இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் உலக பங்குச் சந்தைகளில் கள நிலவரம் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஏற்றம் காரணம்
 

ஏற்றம் காரணம்

பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பங்குச் சந்தை வர்த்தகர்கள் எதிர்பார்த்தது போலவே, கொரோனா லாக் டவுன் 5.0 கடுமையாக நீட்டிக்கப்படவில்லை. நிறைய தளர்வுகளுடனேயே லாக் டவுன் கடைபிடிக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இதனால் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையில் சென்செக்ஸ் இன்று எகிறிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிலவரம்

கடந்த வெள்ளிக் கிழமை மாலை சென்செக்ஸ், 32,424 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 32,906 புள்ளிகளில் கேப் அப்பிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸின் அதிகபட்ச புள்ளியாக 33,376 புள்ளிகள் வரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக, 952 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

பி எஸ் இ பங்குகள்

பி எஸ் இ பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 28 பங்குகள் ஏற்றத்திலும், 02 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,088 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,658 பங்குகள் ஏற்றத்திலும், 318 பங்குகள் இறக்கத்திலும், 112 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்
 

உலக பங்குச் சந்தைகள்

மே 29, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 1.29 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது. மே 29, 2020 அன்று, லண்டனின் எஃப் டி எஸ் இ 2.29 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.59 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.65 % ஏற்றஇறக்கத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. ஆனால் இன்று ஆசியாவில் கதையே வேறாக இருக்கிறது.

ஆசியா

ஆசியா

ஆசியாவில் எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஹாங்காங்கின் ஹேங்செங் சந்தை 3.35 % ஏற்றாத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இருப்பதிலேயே குறைவான ஏற்றம் என்றால் ஜப்பானின் நிக்கி இண்டெக்ஸ் தான் 0.34 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

பங்கு விலை நிலவரம்

பங்கு விலை நிலவரம்

டாடா ஸ்டீல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், சிப்லா, சன் பார்மா, பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

டாலர் & கச்சா எண்ணெய்

டாலர் & கச்சா எண்ணெய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, இப்போது தான் 75.5 ரூபாய்க்கு கீழ் வண்டிருக்கிறது. தற்போது, 1 டாலர் = 75.31 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமாராக 37 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex up 952 points trading at 33,376 as on 01st June 2020

The Bombay stock exchange benchmark index sensex up 952 points trading at 33,376 as on 01st June 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X