அப்படி போடு.. 685 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்! ஆறுதல் அடைந்த முதலீட்டாளர்கள்!

பிப்ரவரி 20, 2020 முதல் சென்செக்ஸ் படு பயங்கரமாக சரிந்து கொண்டே இருந்தது.

பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 28 வரை தொடர்ந்து சரிவு தான். இந்த பிப்ரவரி 20-ம் தேதி 41,399 என்கிற உச்சப் புள்ளியைத் தொட்டது சென்செக்ஸ்.

பிப்ரவரி 28-ம் தேதி சென்செக்ஸ் 38,297-த் தொட்டு நின்றது. ஆக ஐந்தே வர்த்தக நாளில் சென்செக்ஸ் சுமாராக 3,100 புள்ளிகள் சரிவைக் கண்டது.

கேப் அப்

கேப் அப்

இந்த இறக்கத்தை எல்லாம் சரி கட்டும் விதத்தில், இன்று காலை முதல் சென்செக்ஸ் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த பிப்ரவரி 28, 2020 மாலை சென்செக்ஸ் 38,297 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 38,910 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சுமார் 610 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது.

ஏற்றம்

ஏற்றம்

சென்செக்ஸ் தன் இன்றைய நாளுக்கான அதிகபட்ச புள்ளிகளான 39,083-ஐத் தொட்ட பின், அந்த உச்சப் புள்ளிகளிலேயே நிலை பெறாமல், கொஞ்சம் இறக்கம் கண்டு வர்த்தகமாகிறது. தற்போது 38,983 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 685 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.

நிஃப்டி

நிஃப்டி

நேற்று மாலை நிஃப்டி 11,201 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 11,387 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 11,391 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக நிஃப்டி 190 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

30 பங்குகள்

30 பங்குகள்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 27 பங்குகள் ஏற்றத்திலும், 03 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,272 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,474 ஏற்றத்திலும், 668 பங்குகள் இறக்கத்திலும், 130 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

52 வார அதிகம் குறைவு

52 வார அதிகம் குறைவு

மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் ஒட்டு மொத்த 2,272 பங்குகளில், 30 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 154 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

பங்கு விலை

பங்கு விலை

ஈஷர் மோட்டார்ஸ், ஹெச் சி எல் டெக், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பஜாஜ் ஆட்டோ, கோட்டக் மஹிந்திரா பேங்க், கெயில், ஹீரோ மோட்டோ கார்ப் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+