ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி, அமெரிக்க ட்ரோன்கள் வழியாக தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இதனால் கிட்டத்தட்ட உலக அளவில் ஒரு பொருளாதார சுனாமியையே கிளப்பி விட்டார் டொனால்ட் ட்ரம்ப்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, கடந்த ஜனவரி 06-ம் தேதி, சென்செக்ஸ் சுமாராக 780 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
கச்சா எண்ணெய்
ஆனால் இப்போது ஓரளவுக்கு அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நடவடிக்கைகள் எல்லாம் கொஞ்சம் கூலாகி இருக்கும் நிலையில், மீண்டும் கச்சா எண்ணெய் விலை எல்லாம் சரியத் தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமாராக 70 டாலர் வரை தொட்டு வர்த்தகமானது. ஆனால் இப்போது மீண்டும் 65 டாலருக்கு இறங்கி வந்திருக்கிறது.
டாலர் Vs ரூபாய்
கச்சா எண்ணெய் போலவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் கடந்த சில நாட்களில் 72 ரூபாய் எல்லாம் தொட்டு வர்த்தகமானது. போர் பதற்றம் குறைந்து இருப்பதால் மீண்டும், அமெரிக்க டாலருக்கு நிகரான நிதிய ரூபாய் மதிப்பு மீண்டும் 71.52 ரூபாய்க்கு திரும்பி இருக்கிறது.
பங்குச் சந்தை
நேற்று மாலை சென்செக்ஸ் 40,817 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,216 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, தற்போது 41,463 என்கிற உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 12,153 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 12,191 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸ் 30
சென்செக்ஸின் 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 05 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,607 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,745 ஏற்றத்திலும், 664 பங்குகள் இறக்கத்திலும், 198 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 2,607 பங்குகளில் 70 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 66 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஏற்ற இறக்கம்
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் யெஸ் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. டி சி எஸ், ஹெச் சி எல் டெக், கோல் இந்தியா, என் டி பி சி, கெயில் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications