அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பிரச்சனை கூல் டவுன் ஆகி இருப்பதால் கச்சா எண்ணெய் விலையும் கூல் டவுன் ஆகி இருக்கிறது.
அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. தற்போது 70.82 ரூபாயாக இறக்கம் கண்டு வருகிறது.
இதற்கு மத்தியில் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் இருக்கும் பங்குகளில் பலதும் நல்ல ஏற்றம் கண்டு இருப்பதால் சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இன்றைய நாள்
கடந்த வெள்ளிக்கிழமை, மாலை சென்செக்ஸ் 41,599 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,788 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,859 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 259 புள்ளிகள் அதிகரித்து இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,296 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,329 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
பங்குகள் நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 23 பங்குகள் ஏற்றத்திலும், 07 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,711 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,545 பங்குகள் ஏற்றத்திலும், 984 பங்குகள் இறக்கத்திலும், 182 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,711 பங்குகளில் 79 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 82 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
லாபம் நட்டம்
இன்ஃபோசிஸ், இண்டஸ் இண்ட் பேங்க், கோல் இந்தியா, கெயில், பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், யூ பி எல், பார்தி இன்ஃப்ராடெல், டி சி எஸ், ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. 1,500-க்கும் மேற்பட்ட பங்குகள் விலை ஏற்றம் என்பதால், சந்தையில் பயங்கரமாக வர்த்தகம் நடந்து இருக்கிறது போல.
உலக சந்தைகள்
அமெரிக்க சந்தை கடந்த ஜனவரி 10, 2020 அன்று -0.27 % இறக்கத்தில் நிறைவடைந்து இருக்கிறது.
ஜனவரி 13, 2020 இன்றைய வர்த்தகத்தில், லண்டனின் எஃப் எஸ் இ 0.55 %,பிரான்ஸின் சி ஏ சி 0.33 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் -0.08 % வர்த்தகமாகி வருகின்றன. ஐரோப்பிய சந்தைகளைத் தொடர்ந்து ஆசியச் சந்தைகள் நிலவரத்தைப் பார்ப்போம்.
ஆசியச் சந்தைகள்
சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ச் நிஃப்டி 0.55%
ஜப்பானின் நிக்கி 0.47 %
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் -0.15 %
ஹாங்காங்கின் ஹேங்செங் 1.11 %
தைவான் நாட்டின் தைவான் வெயிட்டெட் 0.74 %
தென் கொரியாவின் கோஸ்பி 1.04 %
தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் 0.35 %
இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 0.34 %
சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 0.75 %
என ஆசிய சந்தைகள் வர்த்தகமாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications