பங்குச் சந்தை ஒரு விசித்ரமான உலகம். பங்குச் சந்தையில் எப்போது ஒரு பங்கின் விலை உயரும் அல்லது வீழ்ச்சி காணும் என்று யாராலும் துல்லியமாக கூற முடியாது. அது போல் பங்கின் விலை எந்த காரணத்துக்காக அதிகரிக்கிறது அல்லது குறைகிறது என்பதும் சில சமயங்களில் மர்மமாகவே இருக்கும்.
பிரபலமான முதலீட்டாளர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்கில் முதலீடு செய்துள்ளார் என்ற தகவல் வெளியானால், அந்த குறிப்பிட்ட பங்கில் பலரும் கண்ணை மூடிக் கொண்டு முதலீடு செய்வார்கள். இதனால் அந்த பங்கின் விலை விறுவிறுவென ஏற்றம் காணும். அதற்கு எடுத்துக்காட்டாக நேற்று பங்குச் சந்தையில் எஸ்ஜி ஃபின்சர்வ் லிமிடெட் பங்கு விலை உயர்ந்ததை சொல்லலாம்.

கடந்த திங்கட்கிழமையன்று பிரபல முதலீட்டாளர் மதுசூதன் முரளிதர் கேலா, எஸ்ஜி ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனத்தின் 1.7 சதவீம் அல்லது 9.51 லட்சம் பங்குகளை வாங்கினார். ஒரு பங்கின் விலை ரூ.350.01 என்ற விலையில் 9.51 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளார் என தகவல்.
இதனையடுத்து மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே எஸ்ஜி ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை 20 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட் அடித்தது. இருப்பினும் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 14.14 சதவீதம் உயர்ந்து ரூ.411.55ல் முடிவுற்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்றும் பங்கு வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.10 சதவீதம் உயர்ந்து ரூ.420.20ஆக இருந்தது.
எஸ்ஜி ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்திய நிறுவனங்களின் டீலர்கள், விநியோகஸ்தர்கள், சில்லரை விற்பனையாளர்கள், வாங்குபவர்கள், சப்ளையர்கள், டிரான்ஸ்போர்ட்டர்கள்/லாஜிஸ்டிக்ஸ் போன்ற சேனல் கூட்டாளர்களுக்கு தொழில்நுட்பத்தின் முழு அளவிலான பயன்பாட்டின் மூலம் உள்ளடக்கிய வணிக நிதி தீர்வுகளை வழங்குகிறது.
கடந்த 2023-24ம் நிதியாண்டில் எஸ்ஜி ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனம் வருவாயாக ரூ.189.72 கோடியும், நிகர லாபமாக ரூ.78.59 கோடியும் ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வாயிலான வருமானம் ரூ.15.72ஆக இருந்தது.
2024 டிசம்பர் காலாண்டில் எஸ்ஜி ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனம் வருவாயாக ரூ.42.49 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.23.69 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வாயிலான வருமானம் ரூ.4.24ஆக இருந்தது. கடந்த 12 மாதங்களில் இப்பங்கின் விலை 1.58 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதேசமயம் இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 1.69 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,333 கோடியாக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!



Click it and Unblock the Notifications