1982ல் சக்தி பம்ப்ஸ் இந்தியா நிறுவனம் ஒரு கூட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. 1995ல் இந்நிறுவனம் பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்பட்டது. இந்நிறுவனம் சோலார் பம்புகள், பிரஷர் பூஸ்டர் பம்புகள், பம்பு-மோட்டார் உள்பட பல்வேறு பல்வேறு வகையான பம்புகள் மற்றும் மோட்டார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மத்திய பிரதேசம் பிதம்பூரில் இந்நிறுவனத்துக்கு 2 உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளின் மொத்த ஆண்டு உற்பத்தி திறன் 5 லட்சம் பம்புகள் மற்றும் மோட்டர்களாக உள்ளது.
சக்தி பம்ப்ஸ் நிறுவனம் தொடர்ந்து நல்ல லாபம் ஈட்டி வருகிறது. இந்நிறுவனம் தற்போது தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 30.9 சதவீதம் உயர்ந்து ரூ.648 கோடியாக அதிகரித்துள்ளது.

2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.459 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் லாபமாக ரூ.104 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 130 சதவீதம் அதிகமாகும்.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே சக்தி பம்ப்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5 சதவீதம் குறைந்து ரூ.1,084.70ஆக இருந்தது. இம்மாதம் 9ம் தேதியன்று மும்பை பங்குச்சந்தையில் இப்பங்கின் விலை 52 வார புதிய உச்சமான ரூ.1,398ஐ எட்டியது.
2024 மார்ச் 14ம் தேதியன்று இப்பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.187.21க்கு சரிந்தது. இருப்பினும் அதன் பிறகு இந்நிறுவன பங்கின விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது.
சக்தி பம்ப்ஸ் பங்கு கடந்த ஒரு வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு 544 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. அதேவேளையில், இந்நிறுவன பங்கின் விலை கடந்த 2 ஆண்டுகளில் 1,437 சதவீதமும். 5 ஆண்டுகளில் 2,499 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இந்நிறுவனம் தனது மூலதன நிதி தேவைக்காக தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கி நிதி திரட்ட உள்ளது. இதற்கு அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவும் கடந்த 7ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளித்தனர் என்று இந்நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications