டிரம்ப்-ன் 2வது ஆட்சியில் எலியும், பூனையுமாக இருந்த சீனா- அமெரிக்கா கடுமையான வர்த்தக போரை எதிர்கொண்ட நிலையில், சீனா அரிய உலோகத்தில் வைத்த கட்டுப்பாடும் டிர்ம்ப்-க்கு ஷாக் கொடுத்தது. சீனாவின் இந்த தடைக்கு பின்பு அமெரிக்கா சீனாவுக்கு நட்புறவு நாட துவங்கியது. இதன் எதிரொலியாக டிரம்ப் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு சீன பங்குச்சந்தையை 3.5 வருட உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
ஷாங்காய் பங்குச் சந்தை புதன்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த மட்டத்தில் முடிவடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக, அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இறுதி ஒப்பந்தத்தை எட்டும் என்ற நம்பிக்கை உருவானது தான்.

ஷாங்காய் காம்போசிட் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 0.45% உயர்ந்து 3,633.99 புள்ளிகளை எட்டியது. இது டிசம்பர் 31, 2021க்குப் பிறகு எட்டப்பட்ட உயர்ந்த அளவாகும். இதேபோல், சீனாவின் முக்கிய நிறுவன பங்குகளை உள்ளடக்கிய சிஎஸ்ஐ300 குறியீடு (CSI300 Index) 0.24% உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஷாங்காய் காம்போசிட் குறியீடு தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து வருகிறது.
வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், செவ்வாய்க்கிழமை அன்று, சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மிக அருகில் இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
"நாங்கள் சீனாவுடன் மிக நெருக்கமாக ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். சீனாவுடன் எங்களுக்கு மிக நல்ல உறவு உள்ளது," என்று டிரம்ப் கூறினார். இது டிரம்ப் ஆட்சிக்கு வந்த புதியதில் இருந்த நிலைப்பாட்டிற்கு தலைகீழாக உள்ளது.
இந்த அறிவிப்பு, உலகளாவிய முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை உருவாக்கி, முதலீட்டை ஷாங்காய் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய காரணத்தால் 3.5 வருட உயர்வுக்கு வழிவகுத்ததுள்ளது. சீனா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படுவது, பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளைக் குறைத்து, முதலீட்டு நம்பிக்கையை மேம்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முக்கிய துறைகள்:
ஷாங்காய் பங்குச் சந்தையில் பாதுகாப்பு மற்றும் நிலக்கரி துறைகளைச் சேர்ந்த பங்குகள் அதிகப்படியான உயர்வைக் கண்டன. இதேபோல் பாதுகாப்பு துறை பங்குகள் 2.65% உயர்ந்தன, அதேவேளையில் நிலக்கரி துறை பங்குகள் 2.21% உயர்வைக் கண்டன. நிலக்கரி துறை பங்குகள் உயர முக்கியமான காரணம் சீனா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்ற அடைந்துள்ளதால் அந்நாட்டில் உற்பத்தி துறை வேகப்படுத்த மின்சார தேவை அதிகரிக்கும் என்ற கணிப்பில் இருக்கலாம்.
சீனாவின் வரிச் சலுகை மாற்றங்கள்
பிஎன்பி பரிபாஸ் (BNP Paribas) நிறுவனத்தின் கிழக்கு ஆசிய சந்தை தலைவர் ஜேசன் லுய் கூறுகையில், சமீபத்தில சீன அரசு புதிய கருவூலப் பத்திரங்கள், உள்ளூர் அரசு பத்திரங்கள் மற்றும் நிதி பத்திரங்களின் வட்டி வருமானத்திற்கு மதிப்பு கூட்டு வரியை (Value-Added Tax) மீண்டும் அறிமுகப்படுத்தியதாகக் குறிப்பிட்டார். இந்த வரி விதிப்பு தான், முதலீட்டாளர்களை தங்கள் நிதியை பங்குச்சந்தைகு மாற்ற தூண்டியிருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வாட் வரி விதிப்பு விளைவாக, பங்குச் சந்தையில் முதலீடுகள் அதிகரித்து, சந்தை உயர்வுக்கு வழிவகுத்தது.
முதலீட்டாளர்களின் தேவை:
மேத்யூஸ் ஆசியா (Matthews Asia) நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ மேலாளர் வின்னி சுவாங், சீன-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கூடுதலான தெளிவு தேவை என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதாகக் கூறினார். வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகள் குறையும்போது, முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறும் என்று அவர் தெரிவித்தார். ஷாங்காய் பங்குச் சந்தையின் உயர்வுக்கு முக்கிய உந்துதலாக அமைந்தது.
உலகளாவிய பொருளாதாரம்
சீன-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உலகளாவிய பொருளாதாரத்திற்கு முக்கியமானது. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களாக இருப்பதால், அவற்றின் வர்த்தக உறவு உலக சந்தைகளை பெரிதும் பாதிக்கிறது.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications