எல்ஐசி-யே வித்திடுச்சா.. அப்படின்னா கவனிக்க வேண்டிய பங்கு தான்.. லிஸ்டில் உள்ள அந்த 3 பங்குகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, இன்சூரன்ஸ் நிறுவனம் மட்டும் அல்ல, சிறந்த முதலீட்டாளரும் கூட. இந்திய பங்கு சந்தைகளில் எல்ஐசி நிறுவனம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

 

எல்ஐசி-யின் போர்ட்போலியோவில் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்க்கும் பங்குகளாக உள்ளன.

எல்ஐசி கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மூன்று லார்ஜ் கேப் நிறுவனங்களின் பங்கினை விற்பனை செய்துள்ளது அது என்னென்ன பங்குகள்? எல்ஐசி புதியதாக வாங்கிய பங்குகள் எது வாருங்கள் பார்க்கலாம்.

இன்சூரன்ஸ் வணிகத்தில் கூடுதல் கவனம்.. ரிலையன்ஸ் நிறுவனத்தின் மெகா திட்டம்!இன்சூரன்ஸ் வணிகத்தில் கூடுதல் கவனம்.. ரிலையன்ஸ் நிறுவனத்தின் மெகா திட்டம்!

3 முக்கிய பங்குகள்

3 முக்கிய பங்குகள்

மாருதி சுசூகி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், சன் பார்மா, ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் உள்ளிட்ட லார்ஜ் கேப் நிறுவனங்களில் செப்டம்பர் காலாண்டில் புராபிட் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.

எனினும் அதேசமயம் மூன்று 3 லார்ஜ் கேப் நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 இது மாருதி சுசூகி

இது மாருதி சுசூகி

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

சன் பார்மா நிறுவனங்களில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாருதி சுசூகி
 

மாருதி சுசூகி

முதல் காலாண்டில் எல் ஐ சி வசம் 1,46,87,166 மாருதி சுசூகி பங்குகள் இருந்தன. மொத்தம் 4.86% பங்குகள் இருந்தன. இரண்டாவது காலாண்டில் மாருதி சுசூகி லிமிடெட் நிறுவனத்தில் எல் ஐ சி வசம் 1,03,66,455 அல்லது 3.43% பங்குகள் மட்டுமே இருந்தன. இரண்டாவது காலாண்டில் செப்டம்பர் காலாண்டில் 43.20 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா


கடந்த ஜூன் காலாண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், எல் ஐ சி நிறுவனம் 34,83,35,549 பங்குகள் அல்லது 4.99% பங்குகள் இருந்தது. செப்டம்பர் காலாண்டில் 23,68,59,959 அல்லது 3.40% பங்குகள் இருந்தன. இந்த நிறுவனத்தில் 11,14,75,590 அல்லது 1.59% பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சன் பார்மா

சன் பார்மா

சன் பார்மா நிறுவனத்தில் செப்டம்பர் காலாண்டில் 10,51,66,136 அல்லது 4.38% பங்குகள் இருந்தன. இதே ஜூன் காலாண்டில் 13,16,69,295 அல்லது 5.49% பங்குகள் இருந்தன. இரண்டாவது காலாண்டில் 1.11% அல்லது 2,65,03,159 பங்குகள் விற்பனை செய்யப்பட்டது.

மேற்கண்ட பங்குகளில் மட்டும் அல்ல, இந்திய பங்கு சந்தையில் உள்ள 105 பங்குகளில் பங்குகள் குறைக்கப்பட்டுள்ளன. இதில் டாப் 10 நிறுவனங்களில் மட்டும் கிட்டதட்ட 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பங்குகள் விற்பனை

பங்குகள் விற்பனை

மாருதி சுசூகியில் 3814 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும், பவர் கிரிட் நிறுவனத்தில் 2452 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கும், சன் பார்மாவில் 2356 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கும், என் டி பி சி -யில் 2066 கோடி ரூபாய் மதிப்பிலும், ஹெச் யு எல் நிறுவனத்தில் 2033 கோடி ரூபாயும், ஹெச் ஏ எல்- நிறுவனத்தில் 1940 கோடி ரூபாயும், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தில் 1482 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கும், சியமென்ட்ஸ் 1435 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கும், பிரிட்டானியாவில் 1235 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கும், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் 1005 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கினையும் விற்பனை செய்துள்ளது.

முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஜூன் காலாண்டில் ஆட்டோ மொபைல், வங்கித் துறை உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், உள்நாட்டு சந்தையில் தேவையானது அதிகரித்து வருகின்றது. எனினும் மூலதன செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது நிறுவனங்களின் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

share market investment: stocks in which LIC made the highest selling in September quarter

Large cap companies including Maruti Suzuki, Power Grid Corporation, Sun Pharma, Hindustan Aeronautics and Hindustan Unilever Ltd have booked profit for the q2.
Story first published: Thursday, November 17, 2022, 20:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X