கடந்த நான்கு நாட்களாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நேற்று இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை மீண்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.
நேற்று (22 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,558 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,728 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,811 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. தற்போது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 151 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,709 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

ஆசிய சந்தைகள்
இன்று (23 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், தைவானின் தைவான் வெயிடெட், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஹாங் காங்கின் ஹேங் செங் சந்தை 0.45 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
BSE சந்தை நிலவரம் என்ன?
சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 12 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பி எஸ் இ-யில் மொத்தம் 2,409 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,452 பங்குகள் ஏற்றத்திலும், 829 பங்குகள் விலை இறக்கத்திலும், 128 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 85 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் பவர் கிரிட் கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா, டைட்டன் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலிவர், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஹெச் சி எல் டெக் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஐரோப்பிய சந்தைகள்
நேற்று (22 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.16 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.05 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.12 % இறக்கத்திலும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.


Click it and Unblock the Notifications